பணக்காரர்கள் நாடுகளில் இந்தியா 3ம் இடம்; போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்
வாஷிங்டன்/புதுடெல்லி, ஜூலை 5–
உலகில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் செல்வந்தர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் நீடிக்கிறார்.
3ம் இடத்தில் இந்தியா
அமெரிக்கா போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டுக்கான பெரும்பணக்காரர்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 2 ஆயிரத்து 755 பெரும் பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த 724 பேர், சீனாவை சேர்ந்த 698 பேர், இந்தியாவை சேர்ந்த 140 பேர் பட்டியலில் அங்கம் வகிக்கின்றனர். இதன்மூலம் அதிக செல்வந்தர்கள் உடைய நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 2ம் இடத்தில் சீனாவும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளது. 136 பெரும்பணக்காரர்களுடன் ஜெர்மனி 4ம் இடத்தில் உள்ளது.
அம்பானி, அதானி
இந்தியாவை பொறுத்தமட்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் 84.5 பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ளார். ஆசியாவின் முதல் பணக்காரரான இவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 10வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி, அதானி |
தமிழர் சிவ்நாடார்
இந்தியாவின் 3வது பணக்காரராக எச்.சி.எல்., நிறுவனத்தின் நிறுவனரான சிவ்நாடார் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.23.5 பில்லியன் டாலராகும். இவர் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 71வது இடத்தில் உள்ளார்.
சிவ் நாடார் |
5ம் இடத்தில் கோடாக் மகேந்திரா வங்கியின் நிறுவன தலைவர் உதய் கோடாக் உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனம் இதுவாகும். உதய் கோடாக் ரூ.15.9 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். இவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 121வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments