‘உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்’; கொரோனா நோயாளியின் மனைவிக்கு அனுமதி
ஆமதாபாத், ஜூலை 22–
மனைவி வழக்கு
இந்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் அவசர வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:
கடந்த அக்டோபர் மாதம் எனக்கு திருமணம் நடந்தது. திடீரென எனது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதற்காக வதோதராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது.
அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் என்னை வாட்டுகிறது. இச்சூழலில் அவரது உயிரணுவை சேமித்து, அதன் மூலம் நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதற்கு சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அனுமதி தரவில்லை. எனது கோரிக்கையை ஏற்று, மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியை பெற்றுத்தர வேண்டும், என குறிப்பிட்டு இருந்தார்.
நீதிமன்றம் அனுமதி
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘மனு செய்த பெண்ணின் கணவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இக்கட்டான சூழலில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே சிகிச்சை பெறும் கணவரின் உயிரணுவை மருத்துவ முறைப்படி சேகரிக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளது.
No comments