இந்தியாவில் கொரோனா 3ம் அலை எப்போது; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
புதுடெல்லி, ஜூலை 17-
இந்தியாவில் கொரோனா 2ம் அலை இன்னும் ஓயாத நிலையில் அதன் 3ம் அலை ஆகஸ்ட்டில் தொடங்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர் சமீரன் பாண்டா கூறியுள்ளார்.
மூத்த ஆராய்ச்சியாளர்
சமீரன் பாண்டா |
ஆகஸ்ட்டில் 3ம் அலை
கொரோனா 3ம் அலையால் இந்தியா ஆகஸ்டு மாதம் பாதிக்கப்படலாம். அப்போது தினசரி 1 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவர்கள். தற்போதைய சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் உருமாறாமல் இருந்தால் அதிக பரவலுக்கு வழிவகுக்காது. அதன்படி கொரோனா முதல் அலையை ஒத்த நிலையில் பாதிப்பு இருக்கும். மாறாக வைரஸ் உருமாற்றம் அடைந்தால் நிலைமை மோசமாகி விடும்.
ஐ.சி.எம்.ஆர்., மற்றும் லண்டன் இம்பிரியல் கல்லுாரி ஆய்வு மற்றும் கணக்கீட்டின்படி தடுப்பூசி செலுத்தாமல் இருத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாதது ஆகியவை தான் கொரோனா 3ம் அலைக்கு காரணமாக இருக்கும். இருப்பினும் 2ம் அலையை ஒப்பிடும்போது இதன் பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments