Header Ads

Header ADS

சீனாவின் புதிய வைரஸ் ‘மங்கி பி’: கால்நடை டாக்டரை பலி கொண்ட துயரம்



பீஜிங், ஜூலை 18–

கொலை வெறியாட்டம் நடத்தும் கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து மீண்டும் புதிய வைரஸ் ஒன்று கிளம்பியுள்ளது. ‘மங்கி பி’ என்னும் இப்புதிய வைரஸ் கால்நடை டாக்டர் ஒருவரை பலி கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்துயரம்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனா இருக்கிறது. இவ்வைரஸை சமாளிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் திக்குமுக்காடி கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் ‘மங்கி பி’ என்னும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பீஜிங் பகுதியை சேர்ந்த கால்நடை டாக்டர் ஒருவர், கடந்த மார்ச் மாதம் இறந்த இரு குரங்குகளை உடற்கூறாய்வு செய்தார். அதன் பிறகு அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளால் அவர் அவதிபட்டார்.

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வினோதமான அறிகுறியால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த டாக்டர்கள், ஏதாவது வைரஸ் அவரை தாக்கி இருக்கக் கூடும் என கருதினர்.

‘மங்கி பி’ வைரஸ் அதிர்ச்சி

இதற்காக அவரது உடலில் இருந்து ‘செரிப்ரோஸ்பினல்’ என்னும் திரவத்தை சேகரித்து பரிசோதித்தனர். அதில் தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரை அந்த டாக்டர்கள் கையாண்ட எந்த வைரசும் அதில் இல்லை. மாறாக, ‘மங்கி பி’ என்னும் ஒருவகை வைரஸ் இருப்பதை கண்டறிந்தனர். உடற்கூராய்வு மேற்கொண்ட குரங்குகளின் உடலில் இருந்து இவ்வைரஸ் தொற்றி இருக்கிறது.

முதன் முறையாக இவ்வைரஸ் 1932ம் ஆண்டில் விலங்கு ஒன்றில் இருந்து அடையாளம் காணப்பட்டது. இந்த நிகழ்வுக்கு முன்பும், பின்பும் மனிதர்கள் யாரையும் இவ்வைரஸ் தாக்கிய வரலாறு இல்லை. சீனாவில் முதன் முறையாக இக்கால்நடை டாக்டரை தான் பாதித்திருக்கிறது.

மே மாதம் பலியானார்

பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர். இருப்பினும் எதிர்பாராதவிதமாக மே 27 ல் அவர் பலியானார். இவ்வைரஸ் கொரோனா போன்று பரவும் தன்மையுடையது என்பதால், கால்நடை டாக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் பரிசோதனை நடந்தது. ஆனால் யாருக்கும் தொற்று இல்லை.

இந்த நிகழ்வு மே மாதமே நடந்திருந்த போதிலும், இது பற்றி சீனா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அனைத்தும் ரகசியமாக நடந்தது. கொரோனா விஷயத்தை போன்று இதையும் சீன அரசு கமுக்கம் காட்டியதை, எப்படியோ மோப்பம் பிடித்த ஊடகம் ஒன்று தற்போது வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதனால் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சீனாவின் ‘மங்கி பி’ வைரஸ் பாதிப்பு செய்தி சர்வதேச ஊடகங்களில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

அது வேற... இது வேற...

சில நாட்களுக்கு முன்பு தான் நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய அமெரிக்கர் ஒருவர் ‘மங்கிபாக்ஸ்’ வைரஸால் பாதிக்கப்பட்டது பற்றி வெளியிட்டிருந்தோம். அதற்குள் ‘மங்கி பி’ என்னும் நுாதன வைரஸ் சீனாவில் இருந்து புறப்பட்டிருப்பது புதிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. அடுத்தடுத்து கிளம்பும் வைரஸ்கள் நம்மை என்ன கதிக்கு ஆளாக்க போகின்றனவோ...!

––––

* தொடர்புள்ள செய்தி:

நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய அமெரிக்கரை ‘மங்கி பாக்ஸ்’ என்னும் புதிய வைரஸ் தாக்கி இருக்கிறது. அது என்ன வைரஸ் தெரியுமா.

* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு

* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை

No comments

Powered by Blogger.