இந்தியாவின் நம்பர்-1 முதல்வர் ஸ்டாலின்; அரியணை ஏறிய சில மாதங்களிலேயே அசத்தல்
சென்னை, ஜூலை 17–
தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
மாறுபட்ட காட்சி
இந்நிலையில் தான் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான ஆய்வை ‘ஓர்மாக்ஸ்’ என்னும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.
சிறந்த முதல்வர் ஸ்டாலின்
கடந்த ஜூன் மாதமும் அந்நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில் தான் சிறந்த முதல்வர் என்னும் பெருமை மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தது. அவர் 68 சதவீத மக்களின் நன்மதிப்பை பெற்றிருப்பதாக ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த ஸ்டாலின் மகன் எம்.எல்.ஏ., உதயநிதி, ‘சிறந்த முதல்வர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் முதல் இடம் பிடித்ததற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தான் காரணம்’ என குறிப்பிட்டார்.
பதவி ஏற்ற சில மாதங்களிலேயே மு.க.ஸ்டாலினுக்கு இம்மகுடம் கிடைத்திருப்பதை தி.மு.க.,வினர் கொண்டாடி வருகின்றனர்.
அடுத்த இடங்களில் யார்
இப்பட்டியலில் அண்டை மாநிலமான கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு 2ம் இடம் கிடைத்துள்ளது. கொரோனா பரவலை கையாண்ட விதம், எளிமையான அணுகுமுறை போன்ற காரணங்களுக்காக அவருக்கு இப்பெருமை பட்டியலில் இடம் கிடைத்தது. இதே போல 3ம் இடத்தில் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் இடம் பெற்றுள்ளார்.
5 முதல் 7 வது இடங்களில் முறையே அஸாம் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.
👍👍
ReplyDelete