Header Ads

Header ADS

காங்.கில் இணையும் பிரசாந்த் கிஷோர்! மோடியை வீழ்த்த ராகுல் புதிய ஆயுதம்


டில்லி, ஜூலை 30–

அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ராகுல் காந்தியுடன் சந்திப்பு

சமீபத்தில் அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி சந்திப்பு நடந்தது. இதில் பல்வேறு விஷயங்களை இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராகுல்காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே.அந்தோணி, அஜய்மாகேன், ஆனந்த்ஷர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தான் பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைப்பது குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் ஊடகங்களுக்கு தெரிவித்த தகவல் வருமாறு:

கட்சியில் சேர்க்க திட்டமா

பிரசாந்த் கிஷோருடன் நடந்த ஆலோசனை பற்றி மூத்த தலைவர்களுடன் ராகுல் விவாதித்தார். அதில் பிரசாந்த் கிஷோரை கட்சியில் நேரடியாக இணைத்துக்கொண்டு செயலாற்றலாமா அல்லது அவரை வெளியில் இருந்து ஒரு ஆலோசகராக பயன்படுத்திக் கொள்ளலாமா என ஆலோசனை கேட்டார்.

தற்போது கட்சிக்கு நல்ல வியூகங்கள் தேவைப்படுகிறது. பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. மாறாக, இது தான் அவரை பயன்படுத்திக்கொள்ள சரியான தருணம் என மூத்த தலைவர்கள் பலரும் கருதுகின்றனர், என தெரிவித்தனர். இருப்பினும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.

காங்., வியூகம்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இம்முறை கோட்டை விட்டால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால், இப்போதே வியூகங்கள் வகுக்கும் பணியை காங்., தொடங்கிவிட்டது.

No comments

Powered by Blogger.