Header Ads

Header ADS

‘சாட்டை’ துரைமுருகன் ஜாமீனை தடுத்தால் போராட்டம்; தி.மு.க. மீது சீமான் பாய்ச்சல்


சென்னை, ஜூலை 29–

‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ் தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து பொய் வழக்கு பதிவு செய்து, பிணையில் வெளிவர முடியாமல் 50 நாட்களாக தொடர்ந்து சிறைப்படுத்தும் தி.மு.க.,வின் பழிவாங்கும் போக்கு ஜனநாயக கருத்துரிமைக்கு எதிரானது’ என சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  அறிக்கை:

சட்டப் போராட்டம்

தமிழ் தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து பதியப்பட்ட 4 வழக்குகளில் மூன்றில் பிணை கிடைத்துவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருபனந்தாள் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்கு மட்டும் இன்னும் பிணை கிடைக்கவில்லை.

இதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவதுாறு வழக்கு என்னும் நிலையில் இருக்கும் இவ்வழக்கிற்கு இந்நேரம் பிணை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களால் பிணை கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. மிகவும் நம்பும் நீதிமன்றம் ஏமாற்றத்தை தருகிறது. பிணை கிடைக்கவிடாமல் கடுமயைான அழுத்தம் கொடுக்கும் ஆளுங்கட்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது.

சீமான் ஆவேசம்

இப்படி மாற்றுக்கருத்து கொண்டோர், அரசியல் விமர்சனம் செய்வோரை தொடர் சிறைவாசம் மூலமாக சித்ரவதை செய்வது தனக்கு எதிராக கருத்து எழக்கூடாது என்கின்ற ஆளும் தி.மு.க.,வின் பாசிச போக்கை காட்டுகிறது. இதனால் அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளளது.

ஆளுங்கட்சியின் இப்போக்கிற்கு எதிராக அணிதிரள வேண்டும். இதற்கு பின்னரும் பிணை கிடைக்கவிடாமல் தி.மு.க., அழுத்தம் கொடுத்தால், சாட்டை துரைமுருகனை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.