Header Ads

Header ADS

மோடியை கலங்கடித்த வங்கப்புயலின் டில்லி பயணம்; சோனியாவை சந்தித்து வியூகம் வகுத்த மம்தா


டில்லி, ஜூலை 28–

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சந்திப்பு புதிய நம்பிக்கை அளிப்பதாகவும், கூடிய விரைவில் நாட்டில் நல்லதொரு மாற்றம் நிகழும் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேற்கு வங்க புயல்

ஐந்து நாள் பயணமாக மேற்கு வங்க புயல் மம்தா பானர்ஜி டில்லி சென்றார். பிரதமர் மோடியை சந்தித்து தங்கள் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை கோரினார். தடுப்பூசி பற்றாக்குறையை உடனடியாக பூர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவர்கள் இருவரும் நாட்டின் அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசினர்.

பெகாசஸ் செயலி

இச்சந்திப்புக்கு பிறகு மம்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

டில்லி வந்த என்னை தேநீர் விருந்துக்காக தனது இல்லத்திற்கு சோனியா காந்தி அழைத்தார். அதை ஏற்று வந்தேன். நாங்கள் இருவரும் தற்போதைய அரசியல் சூழல் பற்றி பேசினோம். பெகாசஸ் செயலி மூலம் அரசியல் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம், கொரோனா சூழல் பற்றியும் விவாதித்தோம், என்றார்.

‘வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியா இந்த சந்திப்பு...’ என்ற நிருபர்களின் கேள்விக்கு, ‘எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது பற்றியும் சோனியா காந்தியுடன் விவாதித்தேன். இது ஒரு நம்பிக்கையளிக்கும் சந்திப்பு. கூடிய விரைவில் நல்ல மாற்றங்களை இச்சந்திப்பு நிகழ்த்தும். எனது பழைய நண்பர்களை தொடர்ச்சியாக சந்திக்கிறேன். அவர்களுடன் பழைய நினைவுகள், புதிய விஷயங்கள் பற்றி பேசுகிறேன்’ என மம்தா பதிலளித்தார்.

தேர்தலுக்கான தயாரிப்பு

இவை அனைத்தையும் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தானே தாங்கள் மேற்கொள்கிறீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு, ‘அடுத்த தேர்தல் வர இன்னும் நிறை காலம் இருக்கிறது. இருப்பினும் அதற்கான தயாரிப்பு முன்னதாகவே இருக்க வேண்டும் அல்லவா’ என பதிலளித்தார். இந்த தேநீர் விருந்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற தலைர்களை மம்தா சந்திக்க இருக்கிறார்.

பா.ஜ.,வை வீழ்த்த வியூகம்

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் களம் உருவாகிவிட்டது. மோடியை வீழ்த்துவதற்கான வங்கத்து புயலின் முன்னெடுப்பு வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


#mamata #soniagandhi #chaipercharcha

No comments

Powered by Blogger.