Header Ads

Header ADS

மத்திய ஆயுதப்படையில் 25,271 காலியிடங்கள்; 10ம் வகுப்பு முடித்தால் போதும் மாத சம்பளம் ரூ.69,100

 

புதுடெல்லி, ஜூலை 18-

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய ஆயுதப்படை படையில் (துணை ராணுவம்) எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐ.சி.பி.பி.) சஷாஸ்தா சீமா பால் (எஸ்.எஸ்.பி.), செயலக பாதுகாப்பு படை (எஸ்.எஸ்.எப்.), ஆயுத ரிசர்வ் படை (ஏ.ஆர்.)ஆகிய பிரிவுகளில் கான்ஸ்டபிள் (ஜெனரல் டூயூட்டி), ரைபிள்மேன் (ஜெனரல் டூயூட்டி) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

பிரிவு வாரியாக பணியிடங்கள்

* பி.எஸ்.எப்., பிரிவில் ஆண் 6413, பெண் 1132 மொத்தம் 7545

* சி.ஐ.எஸ்.எப். பிரிவில் ஆண் 7610, பெண் 854 மொத்தம் 8464

* எஸ்.எஸ்.பி. பிரிவில் ஆண் 3806 மொத்தம் 3806

* ஐ.டி.பி.பி. பிரிவில் ஆண் 1216, பெண் 215 மொத்தம் 1431

* ஏ.ஆர். பிரிவில் ஆண் 3185, பெண் 600 மொத்தம் 3785

* எஸ்.எஸ்.எப். பிரிவில் ஆண் 194, பெண் 46 மொத்தம் 240

மொத்த காலியிடங்கள் 25,271

சம்பளம்

* மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 ஆயிரம் கிடைக்கும்.

கல்வி தகுதி

* விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

* விண்ணப்பத்தாரர்கள் 02.08.1998 முதல் 01.08.2003 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 01.08.2021ன் படி 18 முதல் 23 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மகன்/மகளுக்கு விதிகள்படி வயது தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை

கணினி வழியாக தேர்வு நடக்கும். மேலும் PET/PST அல்லது Detailed Medical Examination (DME) அல்லது Review Medical Examination (RME) உண்டு.

விண்ணப்ப தேதி

விண்ணப்பத்தாரர்கள் 31.08.2021 இரவு 11.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 2ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.  தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப முறை

ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் ssc.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்கள் அறிய விரும்புவோர் Click here இதை கிளிக் செய்து பார்த்து தெளிவாக புரிந்து கொள்ளலாம். 

விண்ணப்பிக்க விரும்புவோர் Click here இதை அழுத்தி திறக்கும் புதிய பக்கத்தில் Login என்ற பாக்சின் அடியில் இருக்கும் New User? Register Now என்பதை கொடுத்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பிற வேலைவாய்ப்பு செய்திகள்

ரெயில்வே துறையில் மாத சம்பளம் ரூ.1.6 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசிநாள்...

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி...  13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் திருச்சி என்.ஐ.டி.யில் பணி... தேர்வு இல்லாதததால் எளிதாக தேர்வாகலாம்... ஆன்லைனில் 18.07.2021க்குள்ளும், ஆப்லைனில் 21.07.2021ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900 சம்பளத்தில் பணியிடங்கள்... விண்ணப்பிக்க 21.08.2021 கடைசி நாள்...

1 comment:

Powered by Blogger.