Header Ads

Header ADS

+2 மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கும் இணையதளங்கள்


சென்னை, ஜூலை 22-

தமிழகத்தில் பிளஸ்2 ரிசல்ட் ஜூலை 19 ல் வெளியானது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் இணையதளங்களில் தங்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளும் விபரம் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியானது

கொரோனா பரவலால் 2020-2021 கல்வி ஆண்டில் தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மேல்படிப்பை தொடர 12ம் வகுப்பு மதிப்பெண் மிக முக்கியமானது. இதனால் மாணவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மதிப்பெண் கணக்கீட்டப்பட்டது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  ஜூலை 19ல் வெளியானது.  தேர்வு முடிவுகள்  www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inwww.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியானது. மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்களிலும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது.

மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்

இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழ்களை 22.07.2021 (இன்று) காலை 11.00 மணி முதல் இணையதளங்கள் அல்லது பள்ளிகள் வழியாக மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி www.dge.tn.gov.inwww.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கி கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய விரும்புவோர்  Click here அல்லது Click here இங்கே கிளிக் செய்து பயன்பெறலாம்.

2 comments:

Powered by Blogger.