Header Ads

Header ADS

இந்தியாவில் மீண்டும் டிக்டாக்; விரைவில் அறிமுகம்


பீஜிங்/புதுடெல்லி, ஜூலை 22-

இந்தியாவில் விரைவில் மீண்டும் டிக்டாக் செயலி அறிமுகம் ஆகிறது. இதற்கான வேலையை டிக்டாக் செயலியின்  ‘பைட்டேன்ஸ்’நிறுவனம் தொடங்கியுள்ளது.

59 செயலிகளுக்கு தடை

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் இந்தியா–சீனா இடையே கடந்த ஆண்டு போர் பதற்றம் நிலவியது. இருநாட்டு ராணுவ வீரர்களும் அடிக்கடி மோதிக்கொண்டனர். இருதரப்பிலும் உயிர்பலி ஏற்பட்டது. இதையடுத்து 2020 ஜூன் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்த செயலிகள் இந்திய நெட்வோர்க்கில் ‘ப்ளேஸ்டோர்’ பகுதியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டது.

இந்த நேரத்தில் இந்தியாவில் 20 கோடி பேர் டிக்டாக்கை பயன்படுத்தியதால் அந்த நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் இந்தியாவில் டிக்டாக் செயலியை நடைமுறைப்படுத்த சீன நிறுவனமாக ‘பைட்டேன்ஸ்’ முயற்சி மேற்கொண்டது. இது தோல்வியடைந்தது.

மீண்டும் வரும் ‛டிக்டாக்’

இதையடுத்து டிக்டாக் பயன்பாட்டாளார்கள் இன்ஸ்டா, யூ–டியூப் பக்கம் திரும்பினர். இந்நிலையில் ‛டிக்டாக்’ செயலியோடு தடை செய்யப்பட்ட ‛பப்ஜி’ செயலி ‛பேட்டல்கிரவுன்ட் மொபைல் இந்தியா’ என்ற பெயரில் புதிதாக இந்தியாவில் கால்பதித்துள்ளது. சீன நிறுவனத்தின் உதவியுடன் செயல்படும் தென்கொரியாவின் கிராப்டன் நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‛செய்ன்’, ‘அமேசான் பிரைம் டே’ என்ற பெயரில் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை அறிமுகப்படுத்த அதன் தாய் நிறுவனமான ‘பைட்டேன்ஸ்’ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக மத்திய அரசிடம் ‛டிக்டாக்’ செயலியின் காப்புரிமை, வடிவமைப்புகள், வர்த்தக முத்திரையுடன் ஜூலை 6ல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது.


பெயரின் எழுத்தில் மாற்றம்

விண்ணப்பத்தில் ‘TikTok’ என்ற பெயரை ‘TickTock’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் ‛டிக்டாக்’ செயலி இந்தியாவில் கால்பதிக்கும். மேலும் இதுதொடர்பாக அந்த நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

அப்போது இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற உள்ளதாகவும், ஏற்கனவே இந்தியாவில் 2019ம் ஆண்டிலேயே நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதையும் எடுத்து கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.