Header Ads

Header ADS

தமிழக சட்டசபை தேர்தல் செலவு எவ்வளவு தெரியுமா?


சென்னை, ஜூலை 3-

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ரூ.666 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடந்தது. இதில் தி.மு.க. , கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

தி.மு.க., தனித்து ஆட்சி அமைத்தது. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

ரூ.666 கோடி செலவு

முன்னதாக தேர்தல் செலவுக்காக ரூ.615.75 கோடி ஒதுக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு மொத்த செலவு கணக்கீடப்பட்டது.  டெலிபோன் கட்டணம், விளம்பர கட்டணம், வாகன வாடகை என பல்வேறு வகையில் கூடுதல் செலவு ஏற்பட்டது.

இதனால் கூடுதலாக ரூ.126.18 கோடி ஒதுக்குப்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கடிதம் அனுப்பினர். இதை பரிசீலனை செய்த அரசு ரூ.48.68 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.  இதன்மூலம் சட்டசபை தேர்தலுக்காக மொத்தம் ரூ.666 கோடி செலவாகிறது.

கூடுதல் செலவு ஏன்

கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்ககு ரூ.148 கோடியும், 2016 சட்டசபை தேர்தலுக்காக ரூ.210 கோடியும் செலவிடப்பட்டது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஓட்டுசாவடிகள் அதிகரிப்பு, கூடுதல் பணியாளர்கள் நியமனம், வாக்காளர்களுக்கு கையுறை வழங்கியது ஆகியவற்றால் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. இதனால் தான் முந்தைய தேர்தல்களை காட்டிலும் பலமடங்கு செலவு அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.