Header Ads

Header ADS

உலக கோப்பை டி20: இந்தியா–பாகிஸ்தான் நேரடி மோதல்; அனல் பறக்கப்போகும் ஆட்டம்



டில்லி, ஜூலை 16–

உலக கோப்பை டுவெண்டி20 கிரிக்கெட் போட்டி அணிகள் பட்டியலில், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் இந்தியா–பாகிஸ்தான் மோதும் ‘ஹை–வொல்டெஜ்’ போட்டி நடப்பது உறுதியாகி இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட்

2021ம் ஆண்டுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டது. கொரோனா பரவலால் இப்போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் உலக கோப்பை டுவெண்டி20 போட்டியை ஓமன், துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்கு அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடக்கின்றன. இதற்காக துபாய், அபுதாபி, சார்ஜா, ஓமன் கிரிக்கெட் மைதானங்கள் தயார்படுத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற 4 அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதிப்போட்டி நடத்தப்படும். இதில் வேறு 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் வெல்லும் 4 அணி, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 8 அணிகள் என 12 அணிகளும் உலக கோப்பை கோதாவில் மல்லுக்கட்டும்.

அணிகள் விவரம் வெளியீடு

இந்நிலையில் உலக கோப்பை டுவெண்டி20 போட்டியில் பங்கேற்கும் அணிகள் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான முறையான அறிவிப்புகள் இன்று வெளியானது.

அதன்படி நேரிடையாக தகுதி பெற்றுள்ள 8 அணிகளில் ‘குரூப் ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் இடம்பெற்றுள்ளன. ‘குரூப் பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் அங்கம் வகிக்கின்றன.

தகுதி சுற்று போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பாபுவா நியூ கயானா, ஓமன் அணிகளும் உள்ளன.

தகுதி சுற்று முடிவு

தகுதி சுற்று முடிவில் இருபிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடி அணிகள் பிரிவுகளில் சேர்க்கப்படும். ஏ பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணிகளும் நேரடியாக பங்குபெறும் அணிகளின் ஏ பிரிவில் இடம்பெறும்.

அதேபோல் தகுதி சுற்றில் குரூப் ஏ பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணியும், குரூப் பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிகளும் நேரிடையாக தகுதி பெற்ற அணிகளின் குரூப் பி பிரிவில் அங்கம் வகிக்கும்.

-------


முந்தைய செய்திகள்:

ரூ.44,900 மாத ஊதியத்தில் அரசு பணி. நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

பேயாகும் காஜல் அகர்வால்... யாமிருக்க பயமேன் பாணியில் மற்றொரு படத்தை இயக்கிய டிகே

No comments

Powered by Blogger.