‘யாமிருக்க பயமே’ இயக்குனரின் புதிய திகில் படம்: இன்று வெளியாகிறது ‘பர்ஸ்ட் லுக்’
புதிய திகில் படம்
காமெடி கலந்த திகில் படம் ‘யாமிருக்க பயமே’. இப்படத்தை இயக்கியவர் டிகே. இதைத்தொடர்ந்து ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ படங்களை இயக்கினார். இவர் இயக்கிய ‘யாமிருக்க பயமே’ பெரும் வரவேற்பை பெற்றது. இதே பாணியில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு ஊடே அசுர வேகத்தில் படப்பிடிப்பு வேலைகளை முடித்தார்.
இப்படத்தில் காஜல்அகர்வால், ஜனனி, ரெஜினா உட்பட 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். காஜல்அகர்வால் முக்கிய பாத்திரத்தை ஏற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் படத்தில் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் இன்று வெளியாக உள்ளது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் டிகே தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில், ‘நான்கு அற்புதமான கதாநாயகிகளை வைத்து நான் இயக்கிய அடுத்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், ஜூலை 16ல் வெளியாகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவில் காஜல்அகர்வால், ஜனனி, ரெஜினா ஆகியோரையும் டேக் செய்துள்ளார். ‘யாமிருக்கே பயமே’ படத்தை போன்று இதுவும் சிறந்த திகில் மற்றும் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments