Header Ads

Header ADS

வாலிபரின் உயிரை பறித்த சமோசா; மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி


போபால், ஜூலை 29-

மத்திய பிரதேச மாநிலத்தில் சமோசாவால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சமோசா விலை உயர்வு

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் பாந்தா கிராமத்தை சேர்ந்தவர் பஜ்ரு ஜெய்ஸ்வால் 30. இவர் நண்பருடன் அருகே உள்ள கடைக்கு சென்று 2 சமோசா வாங்கினார். ரூ.20 வழங்கும்படி கடையில் இருந்த பெண் வியாபாரி காஞ்சன் சாகு கேட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பஜ்ரு ஜெய்ஸ்வால், ‛இதற்கு முன்பு 2 சமோசா ரூ.15 தானே. எதற்காக இப்போது ரூ.20 கேட்கிறீர்கள்’ என கேள்வி கேட்டார். இதற்கு, ‛தற்போது மூலப்பொருட்களின் விலை ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் சமோசாவின் விலையையும் கூட்டி உள்ளேன்’ என வியாபாரி பதிலளித்தார்.

போலீஸ் விசாரணை

இதை பஜ்ரு ஜெய்ஸ்வால் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவருக்கும், வியாபாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து பெண் வியாபாரி அமர்காந்தாக் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் பஜ்ரு ஜெய்ஸ்வாலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

தீக்குளித்து தற்கொலை

விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அவர் மீண்டும் அந்த கடைக்கு சென்று பெண் வியாபாரியுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது திடீரென்று பஜ்ரு ஜெய்ஸ்வால் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வீடியோ வைரல்

இதற்கிடையே அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வீடியோ இணையதளங்கில் வைரலாகி உள்ளது.


மேலும் இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்க: கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியில் பின்தங்கிய தமிழக மக்கள்; ‛செரோ சர்வே’ ஆய்வில் ஆபத்தான தகவல்

பிற செய்திகள்...

* திருமணத்துக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு; தெலுங்கானாவில் காங்., அறிமுகம்

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு

கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை

* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி

கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்

* இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி; டில்லி சிறுவன் உயிரிழந்த சோகம்

நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய அமெரிக்கரை ‘மங்கி பாக்ஸ்’ என்னும் புதிய வைரஸ் தாக்கி இருக்கிறது. அது என்ன வைரஸ் தெரியுமா.

No comments

Powered by Blogger.