Header Ads

Header ADS

49, 99 வித்தியாசம் தெரியாத தவான்; உண்மையை உடைத்த யுவராஜ் சிங்

புதுடில்லி, ஜூலை 11–

‘‘இலங்கை தொடருக்கான இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷிகர் தவானுக்கு 49க்கும் 99க்கும் வித்தியாசம் தெரியாது’’ என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறினார்.

தவான் கேப்டன்

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள், 3 டுவெண்டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இளம் வீரர்களை கொண்ட இலங்கை சென்றுள்ளது.

இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் உள்ளார்.

யுவராஜ் சிங்கின் அனுபவம்

இந்நிலையில் ஷிகர் தவான் கேப்டன்ஷிப்பில் நடந்த வேடிக்கை சம்பவம் குறித்த அனுபவத்தை இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பகிர்ந்துள்ளார்.

தனியார் இணையதளம் ஒன்றுக்கு யுவராஜ் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வித்தியாசம் தெரியாத தவான்


தவானின் கேப்டன்ஷிப் வேடிக்கையாக இருக்கும். அவரது தலைமையின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன். இந்தியாவில் நடக்கும் துலிப் டிராபிக்கான போட்டியில் நார்த்ஜோன் அணிக்காக நான் விளையாடினேன். கேப்டனாக தவான் இருந்தார்.

சென்ட்ரல்ஜோன் அணிக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். புவனேஸ்வர் குமார் 49 ரன்கள் அடித்திருந்த நிலையில் தவான் அனைத்து பீல்டர்களையும் உள்வட்டத்திற்குள் நிறுத்தினார்.

ஸ்லீப்பில் நின்ற நான் எதற்காக இந்த பீல்டிங் மாற்றம் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவரோ, ‛புவனேஸ்வர் குமார் 99 ரன்கள் அடித்துள்ளார். சதமடிப்பதை தடுக்கவே இந்த வியூகம்’ என பதிலளித்தார். இதை கேட்டு சிரிப்பை அடக்க முடியாத நான், ‛புவனேஸ்வர் 99 ரன் எடுக்கவில்லை 49 ரன் தான் அடித்துள்ளார்’ எனக்கூற சுதாரித்து கொண்ட தவான் மீண்டும் அனைவரையும் பழைய இடத்தில் பீல்டிங்கிற்கு அனுப்பினார். இலங்கை தொடருக்கு தவான் கேப்டன் என்றவுடன் எனது மனதில் உதித்த வேடிக்கையான விஷயம் இதுதான்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.

1 comment:

Powered by Blogger.