வவ்வாலால் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்; ஆப்பிரிக்காவில் ஒருவர் பலியானதால் அலறும் WHO
ஜெனீவா, ஆக.,11-
மேற்கு ஆப்பிரிக்க நாடான கனியாவில் மிகக்கொடிய உயிர்கொல்லி வைரஸான மார்பர்க் பரவ துவங்கியுள்ளது. வவ்வால் மூலம் பரவும் இந்த வைரசுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
கினியாவில் பரவல்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கினியா. இங்குள்ள குக்கிடோ மாவட்டம் லிபிரியா–ஐவரி கோஸ்ட் நாடுகளின் எல்லையாக உள்ளது.
இந்த மாவட்டத்தில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.
இவரது உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை கினியா தேசிய ரத்தகசிவு, காய்ச்சல் ஆய்வகம், சேனகல் பாஸ்டர் நிறுவனம் ஆய்வு செய்தது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர் மார்பர்க் எனும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இறப்பு சதவீதம் 88 சதவீதம்
இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின்(World Health Organisation, WHO) ஆப்பிரிக்க பிராந்திய இயக்குனர் மத்ஷிசிடோ மொய்தி கூறியதாவது:
மார்பர்க் உயிர்கொல்லி வைரஸாகும். வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸை உடனடியாக கட்டுப்படுத்துவது அவசியம். இதனால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரது இறப்பு சதவீதம் 88 ஆகவுள்ளது. இதனால் தான் உயிர்கொல்லி வைரஸ் என அழைக்கிறோம்.
குகை, சுரங்கத்தில் வாழும் பழம் தின்னும் வவ்வாலில் இருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர், வியர்வை உள்ளிட்ட திரவத்தால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது பரவும் தன்மை கொண்டது. அறிகுறியாக தலைவலி, ரத்த வாந்தி, தசைவலி இருக்கும்.
‛எபோலா’ அனுபவம்
இதற்கு முன்பு எபோலா வைரஸ் கினியா நாட்டின் குக்கிடோ மாவட்டத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதேபோல் மார்பர்க் வைரசும் அங்கேயே முதலாவதாக தென்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். மார்பர்க் வைரசும் ‘எபோலா’ குடும்பத்தை சேர்ந்தது தான். இதனால் எபோலா வைரசை கட்டுப்படுத்தியதற்கான அனுபவம் எங்களுக்கு கைக்கொடுக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.
வாய்ப்பு குறைவு
ஆப்பிரிக்க நாடுகளில் 1967ல் இருந்து இதுவரை 12 வகையான மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது தான் இந்த வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய இந்த வைரஸ் பாதிப்பு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்பரிக்க நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் பரவியது. இதற்கு கினியாவும் விதிவிலக்கல்ல. ஒருவழியாக போராடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் எபோலா வைரசை கட்டுப்படுத்தினர். 2 மாதங்களுக்கு முன்னர் தான் எபோலா இல்லாத நாடாக கினியா அறிவிக்கப்பட்டது. தற்போது அங்கு மார்பர்க் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்கள்... வாட்ஸ்அப்பில் சில வினாடிகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி...
தொடர்புடைய செய்திகள்...
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்
* டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
🤕🤕🤕🤒
ReplyDelete