Header Ads

Header ADS

வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி; 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் சாதனை


டோக்கியோ, ஆக.5- 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. ஜெர்மனியை வீழ்த்திய இந்தியாவுக்கு ஹாக்கியில் 40 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைத்துள்ளது.

பறிபோன பைனல்

ஜப்பான் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் அரைஇறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
சமீபத்தில் பெல்ஜியத்துடன் மோதிய இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் பைனல் வாய்ப்பு பறிபோனது.

வெண்கலகம் வென்று அசத்தல்

இதையடுத்து வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா, ஜெர்மனியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து சமநிலை வகித்தன. இதனால் 2ம் பாதி ஆட்டம் விருவிருப்பானது.

இதில் இந்திய அணி 2 கோல் அடிக்க ஜெர்மனி அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசிவரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியின் இறுதியில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன்மூலம் வெண்கலபதக்கத்தை இந்திய அணி வென்றது.

40 ஆண்டுக்கு பின்...

ஒலிம்பிக் போட்டியை பொறுத்தவரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இறுதியாக 1980ல் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பிறகு 40 ஆண்டுகளுக்கு பின்  தற்போது ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யவும்; ஆணுறையை பயன்படுத்தி தங்கம், வெண்கலம் என 2 பதக்கம் வென்ற ஆஸி., வீராங்கனை; ஒலிம்பிக்கில் நடந்தது என்ன

வேறு செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; புள்ளிபட்டியலில் எந்த இடம் தெரியுமா...

No comments

Powered by Blogger.