பிரதமரின் 3ம் மனைவி 2வது முறை கர்ப்பம்; ரகசிய திருமணத்துக்கு முன்பே முதல் குழந்தை பெற்றெடுத்தவர்கள்
பிரதமர் நரேந்திர மோடியுடன், போரிஸ் ஜான்சன் |
லண்டன், ஆக.2-
போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (வயது 57). இவரது முதல் மனைவியின் பெயர் அலிக்ரா மொஸ்டின் ஒவன். இவருடன் 1987 முதல் 1993 வரை 6 ஆண்டுகள் வாழ்ந்தார். அதன்பின் அவரை விவாகரத்து செய்தார்.
பின் இரண்டாவதாக வக்கீலான மரினா வீலர் என்பவரை கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன. 26 ஆண்டுகால இல்லற வாழ்க்கைக்கு பிறகு மரினா வீலரையும் பிரிந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்தது. கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
திருமணத்துக்கு முன்பே குழந்தை
இதற்கிடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கும்போதே கேரி (33) என்பவரை போரிஸ் ஜான்சன் காதலித்தார். இவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் போரிஸ் ஜான்சன்-கேரி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வில்ப்ரெட் என பெயரிடப்பட்டது.
ரகசிய திருமணம்
இதன் தொடர்ச்சியாக போரிஸ் ஜான்சன்-கேரி ஆகியோர் முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இருப்பினும் அதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
மனைவி கேரியுடன், போரிஸ் ஜான்சன் |
இந்நிலையில் இருவரும் 2021 மே மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இது போரிஸ் ஜான்சனின் 3வது திருமணமானது.
கர்ப்பம்
திருமணத்துக்கு பிறகு தற்போது 2வது முறையாக கேரி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
அதில், ‛இந்த ஆண்டு தொடக்கத்தில் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதை அறிந்து இதயம் வெடித்து போனது. தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமை கொள்கிறேன். இருப்பினும் சிலநேரம் அதிகமாக பதற்றம் அடைகிறேன்.
கர்ப்ப காலத்தில் வரும் பிரச்சினைகள் பெரும்பாலானவர்களுக்கு கடினமாக இருக்கும். இழப்பை அனுபவித்தவர்களிடம் இருந்து அதுபற்றி கேட்க எனக்கு உண்மையான ஆறுதல் கிடைத்தது. இந்த விஷயத்தை பகிர்வது யாருக்காவது உதவும் என நம்புகிறேன்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
‛ரெயின்போ சைல்ட்’
இதுபற்றி போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‛‛வரும் கிறிஸ்துமஸ் மாதத்தில்(டிசம்பர்) என் மனைவியிடம் இருந்து ‛ரெயின்போ சைல்ட்’ (குழந்தை) எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
அதாவது கருச்சிதைவு அல்லது பிறந்த குழந்தை இறந்த பின் அடுத்ததாக பிறக்கும் குழந்தையை ‛ரெயின்போ சைல்ட்’ என கூறுவது வழக்கமாகும்.
4 வது முறை
மேலும் இந்த நூற்றாண்டில் பிரிட்டன் பிரதமாக இருக்கும் ஒருநபரின் மனைவிக்கு குழந்தை பிறப்பது 4வது முறையாகும்.
இதற்கு முன்பு டோனி பிளேயர், டேவிட் கேமரூன் ஆகியோர் பிரதமராக இருந்தபோது அவர்களின் மனைவிகள் குழந்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
* ஆசிய நாடுகளில் தாண்டவம் ஆடும் டெல்டா வைரஸ்; இந்தியாவுக்கு மீண்டும் ஆப்பு
* தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதியுங்க... கொரோனா பரவலால் மத்திய அரசு உத்தரவு
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்
* டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
* காங்.,கில் இணையும் பிரசாந்த் பிரசாந்த் கிஷோர்... மோடியை வீழ்த்த ராகுல் புதுஆயுதம்
* காதலிகளை கொன்று கம்மல்கள் சேகரிப்பு; 130 பேரை கொன்ற கொன்ற கொடூரன் தூக்கு நிறைவேற்றும் முன் சாவு
No comments