சீனாவில் பரவும் புதிய பாக்டீரியா நோய்கள்; கால்நடைகள் மூலம் மனிதனை தாக்குமாம்
பெய்ஜிங், ஆக.,19-
சீனாவில் ஆந்த்ராக்ஸ் நிமோனியா, ஆந்த்ராக்ஸ் எனும் புதியவகை பாக்டீரியா நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கால்நடைகள் மூலம் மனிதனை தாக்குமாம்.
சீனாவில் புதிய நோய்
இந்தியா உள்பட ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் பரவி உருமாறி தாக்குதல் நடத்தும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்த வைரசை முழுமையாக அழிக்க இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கவில்லை.
மாறாக கொரோனா வைரசின் பாதிப்பை சமாளிக்க தேவையான நோய் எதிர்ப்பு திறன் பெற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் புதுவகையான நோய் பரவ துவங்கி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
உடல்நலம் பாதிப்பு
சீனாவின் வடக்கு ஹீபி மகாணம் செங்டி நகரை சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நோய் குணமாகவில்லை.
இதையடுத்து அவர் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மற்றும் முன் தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டன.
ஆந்த்ராக்ஸ் நிமோனியா, ஆந்த்ராக்ஸ்
இதில் அவர் ‛ஆந்த்ராக்ஸ் நிமோனியா’ எனும் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளில் இருந்து இவருக்கு இந்நோய் பரவியதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சீனாவின் சான்ஜி மகாணம் வென்ஷூ கிராமத்தில் 9 பேருக்கு ‛ஆந்த்ராக்ஸ்’ நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கால்நடை வளர்ப்பு, பால் விற்பனை, இறைச்சி வெட்டும் தொழிலில் ஈடுபட்டும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் குணமான நிலையில் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அறிகுறிகள் என்ன
பொதுவாக நோய் பாதித்த கால்நடைகள் மற்றும் அதன் உணவு பொருட்களை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு ‛ஆந்த்ராக்ஸ்’ பாதிப்பு ஏற்படும். கால்நடைகளின் தோல் மூலமாகவே 95 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
மனிதர்களை இந்நோய் தாக்கினால் உடலில் கொப்பளங்கள் உருவாதல், தோல் மேற்புறம் சிதைந்து கருப்பாக மாறுதல், குமட்டல் ஆகியவை அறிகுறியாக இருக்கும்.
பாக்டீரியா நோய்
பொதுவாக ‛ஆந்த்ராக்ஸ்’ நோய் ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவில் அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‛ஆந்த்ராக்ஸ்’ நோயில் ‛ஆந்த்ராக்ஸ் நிமோனியா’ வகை பாதிப்பு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இது அரிதானது.
இருப்பினும் ‛ஆந்த்ராக்ஸ்’ மனிதர்களுக்கு இடையே பரவும் தன்மை கொண்டது. இருப்பினும் இது காய்ச்சல் அல்லது கொரோனா வைரஸ் வகையை சேர்ந்தது அல்ல. இது ‛பாசில்லஸ் ஆந்த்ராசிஸ்’ எனும் பாக்டீரியாவால் பரவுகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு ஆன்டிபாடிகள் உள்ளன.
இவ்வாறு அந்த மையம் கூறியுள்ளது.
கொரோனா நோயை முழுவதுமாக ஒழியாத நிலையில் சீனாவில் பாக்டீரியா நோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பது அங்குள்ள மக்களை அச்சமடைய செய்துள்ளது. நீங்களே சொல்லுங்கள்... புதுசு... புதுசா... நோய் பரவுனா அவங்களும் என்ன தான் செய்வாங்க...
இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்... வவ்வாலால் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்... ஆப்பிரிக்காவில் ஒருவர் பலியானதால் அலறும் WHO
தொடர்புடைய செய்திகள்...
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்
* டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
No comments