ஆணுறையால் 2 பதக்கம் வென்ற வீராங்கனை; ஒலிம்பிக்கில் நடந்தது என்ன
டோக்கியோ, ஆக.,4-
டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஆணுறையை பயன்படுத்திய ஆஸ்திரேலிய வீராங்கனை துடுப்பு படகு போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்றார்.
ஒலிம்பிக் போட்டி
ஜப்பான் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஆணுறையை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த துடுப்பு படகு வீராங்கனை தங்கம் உள்பட 2 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்...
தங்கம், வெண்கல பதக்கங்கள்
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜெசிக்கா பாக்ஸ். துடிப்பு படகு போட்டி வீராங்கனையான இவர் 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் K1 துடுப்பு படகு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். அதன்பின் 2016ல் அரங்கேறிய ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதால் நிச்சயமாக பதக்கம் வெல்வார் என்ற ஆவல் ஏற்பட்டது. அதன்படி ஜூலை 27 ல் நடந்த பெண்களுக்கான K1 துடுப்பு படகு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின் ஜூலை 29ல் நடந்த C1 துடுப்பு படகு போட்டியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தையும் வென்றார்.
உதவிய ஆணுறை
இதில் கவனிக்ககூடிய விஷயம் என்னவென்றால் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கும் ஆணுறையை பயன்படுத்தி ஜெசிக்காவின் படகு பழுதுநீக்கப்பட்டுள்ளது.
அதாவது போட்டிக்கு முன்பாக படகின் முன்முனை சேதமடையவே அதை கார்பன் கலவை கொண்டு சரிசெய்தனர். மேலும் கார்பன் கலவை பாதுகாப்புக்காக அதன்மீது ஆணுறையை பயன்படுத்தினர். அந்த படகை பயன்படுத்தியே ஜெசிக்கா பதக்கங்கள் வென்றுள்ளார்.
வீடியோ வெளியீடு
இந்நிலையில் ஆணுறை கொண்டு ஒருவர் படகை சரிசெய்யும் வீடியோவை ஜெசிக்கா தனது டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், ‛‛துடுப்பு படகை சரிசெய்ய ஆணுறை பயன்படும் என்பதை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் போட்டியை சிறப்பாக முடித்து வைக்க அது எனக்கு பயன்பட்டது ’’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஏய்ட்ஸ் விழிப்புணர்வு
பொதுவாக ஒலிம்பிக் போட்டியின்போது ஏய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான உடலுறவுக்காக வீரர், வீராங்கனைகளுக்கு ஆணுறைகள் வழங்கப்படும். தற்போது கொரோனா பரவல் உள்ளதால் வழக்கத்தை விட குறைவாக 1.60 லட்சம் ஆணுறைகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டன.
இதை ஒலிம்பிக் கிராமத்தில் பயன்படுத்தாமல் சொந்தநாட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்திய நிலையில் ஆணுறையை பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீராங்கனை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யவும்; வெண்கலபதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி; 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் அசத்தல்...
வேறு செய்திகள்
* டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; புள்ளிபட்டியலில் எந்த இடம் தெரியுமா...
No comments