ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு பணி; நிலக்கரி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
புதுடெல்லி, ஆக.,11-
மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இந்திய நிலக்கரி லிமிடெட்(Coal India Limited) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:
நிறுவன பெயர்
Coal India Limited
காலியிடம்
மொத்தம் 588 காலியிடங்கள் உள்ளன. Management Trainee யாக Mining (253), Electrical (117), Mechanical (134), Civil (57), Industrial Engineering (15), Geology (12) பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்
மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் முதல் 1.60 லட்சம் கிடைக்கும்.
கல்வி தகுதி
Mining, Electrical, Mechanical, Civil, Industrial Engineering பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் BE/B.Tech/ B.sc (Engg.) முடித்திருக்க வேண்டும். Geology பணியிடங்களுக்கு M.sc/ M.tech பிரிவில் Geologly or Applied Geology Or Geophysics or Applied Geophysics முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
04.08.2021 ந் தேதிப்படி அதிகபட்சமாக 30 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை
Graduate Attitude Test in Engineering (GATE) மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 09.09.2021 ந் தேதி இரவு 11.59 மணிக்குள் www.coalindia.in இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்கள் அறிய Click here
விண்ணப்பம் செய்ய Click here
மேலும் இந்த செய்தியை படிக்க இதை கிளிக் செய்யுங்கள்; தேர்வின்றி மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலை; விண்ணப்பம் செய்ய 29.08.2021 கடைசிநாளாகும்.
👍👍👍
ReplyDelete