வாட்ஸ்அப்பில் தடுப்பூசி சான்றிதழ்; சில வினாடியில் பெறுவது எப்படி
புதுடெல்லி, ஆக.,9-
வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சில வினாடியில் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றிய முழுவிபரம் வருமாறு:
தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
இந்தியாவில் கொரோனா பரவும் சூழலில் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறி அதற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அரசு, தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வராததால் இந்தியாவில் இருந்து பிற நாடுகள் செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா 3ம் அலையையொட்டி இந்தியாவில் சில மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லவும் அந்த சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் சிக்கல்
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் (Download) செய்யும் Cowin இணையதளத்திலும் சிலநேரம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் தடுப்பூசி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதோடு அவர்களின் பயணங்களுக்கும் தடை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
வாட்ஸ்அப்பில் பெறுவது எப்படி
இந்நிலையில் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‛‛கொரோனா சான்றிதழை வாட்ஸ்அப்பில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். MyGov Corono Helpdesk மூலம் ஈசியான 3 வழிமுறையை பின்பற்றி கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கி கொள்ளலாம்.
அதன்படி முதலில் +91 90131 51515 என்ற எண்ணை செல்போனில் சேமிக்க வேண்டும். அதன்பிறகு ‛covid certificate’ என ‛டைப்’ செய்து ‛வாட்ஸ்-அப்’ அனுப்ப வேண்டும். இதையடுத்து கிடைக்கும் OTP-யை ‛டைப்’ செய்த பின் வரும் குறுஞ்செய்தியை தொடர்ந்து 1 என அனுப்பினால் தடுப்பூசி சான்றிதழை சில வினாடிகளிலேயே பெறலாம்’’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்க: கொரோனா 3ம் அலை இம்மாதம் உருவாகும்; ஐ.ஐ.டி., ஆய்வில் திடுக் தகவல்
தொடர்புடைய செய்திகள்...
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்
* டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
No comments