‛டெல்டா ப்ளஸ்’ வைரஸால் உயரும் உயிர்பலி; 3ம் அலைக்கு முன்னோட்டமா
மும்பை, ஆக.14-
‛டெல்டா ப்ளஸ்’ கொரோனா வைரஸால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் கொரோனா 3ம் அலைக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இம்மாதம் கொரோனா 3ம் அலை
இந்தியாவில் கொரோனா 3ம் அலை இம்மாதம் தொடங்கும் என மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தொடுகிறது.
இதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று உயர தொடங்கியுள்ளது. மேலும் மிகக்கொடிய ‛டெல்டா ப்ளஸ்’ கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது. தற்போது வரை அந்த வைரஸ் 5 பேரை கொன்று உள்ளது. இது 3ம் அலைக்கு முன்னோட்டமா இருக்குமோ என அஞ்சப்படுகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:
மராட்டியத்தில் ‛டெல்டா ப்ளஸ்’
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பிடும் விஷயம் என்னவென்றால் ‛டெல்டா ப்ளஸ்’ வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதகரிக்கிறது. அங்கு இதுவரை 66 பேர் ‛டெல்டா ப்ளஸ்’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32 ஆண்களும், 34 பெண்களும் அடங்குவர். இவர்களில் 7 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் ஆகஸ்ட் 8 ல் மட்டும் 20 பேரை ‛டெல்டா ப்ளஸ்’ தாக்கியுள்ளது.
ரத்னகிரியில் 2 பேர், மும்பை, பிட், ராய்காட் பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் ‛டெல்டா ப்ளஸ்’ வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றாலும் 2 பேர் 2 டோஸ் தடுப்பூசியும், 2 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியவர்கள் ஆவர்.
3ம் அலைக்கு முன்னோட்டமா
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் ‛டெல்டா ப்ளஸ்’ வைரஸ் எமனாக இருப்பதால் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா வகை வைரஸில் இறப்பை ஏற்படுத்தும் சதவீதம் அதிகம் உள்ள வைரஸ் ‛டெல்டா ப்ளஸ்’ என்பதால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது.
இல்லாவிட்டால் கொரோனா 3ம் அலைக்கு முன்னோட்டமாக இது அமைய வாய்ப்பாக மாறிவிடும் என என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்... வவ்வாலால் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்... ஆப்பிரிக்காவில் ஒருவர் பலியானதால் அலறும் WHO
தொடர்புடைய செய்திகள்...
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்
* டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
No comments