‛டக், கோல்டன் டக்’ கோலி முதலிடம்; டோனியை முந்தி மோசமான சாதனை
நாட்டிங்ஹாம், ஆக.,6-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை ‛கோல்டன் டக்’ ஆனதோடு வீரராக 9 முறை ‛டக்’ அவுட்டாகி டோனியை முந்தி விராட் கோலி முதலிடம் பிடித்து மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்
இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடக்கிறது. நாட்டிங்ஹாமில் நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 183 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து குவித்தது.
அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவிற்கு ரோகித்ஷர்மா, ராகுல் ஜோடி தொடக்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்த ஜோடி 21 ரன் சேர்த்தது.
‛கோல்டன் டக்’ கோலி
நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித்-ராகுல் சிறப்பாக ஆடி நல்ல துவக்கம் தந்தனர். 97 ரன்னை அணி கடந்தபோது ரோகித் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பூஜாரா மீண்டும் சொதப்ப 4 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் விராட்கோலி அடுத்த பந்திலேயே ‛கோல்ட்ன்டக்’ (ரன் எடுக்காமல் முதல் பந்தில் அவுட்) ஆகி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
துணை கேப்டன் ரகானே 5 ரன்னில் ரன்அவுட் ஆக நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 112 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. ராகுல் 57 ரன், ரிஷாப்பண்ட் 7 ரன் எடுத்து களத்தில் இருந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
மோசமான சாதனையில் முதலிடம்
நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி ‛கோல்டன் டக்’ ஆனதால் மோசமான ஒரு சாதனைக்கு சொந்தக்காரரானார். அதாவது இந்திய கேப்டன் பொறுப்பில் இருக்கும்போதே அதிகமுறை ‛கோல்டன் டக்’ ஆன வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் பிடித்தார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முறை கோலி ‛கோல்டன் டக்’ ஆகியுள்ளார். இவருக்கு அடுத்து 2வது இடத்தில் முன்னாள் கேப்டன்களான லாலா அமர்நாத், கபில்தேவ், சவுரவ் கங்குலி உள்ளனர்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் வகித்தவர்கள் ஒரு வீரராக ‛டக்’ அவுட் ஆனதிலும் விராட் கோலி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 9 முறை(101 இன்னிங்ஸ்) டக் அவுட் ஆகியுள்ளார். இதன்மூலம் அவர் டோனியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார். டோனி இதுவரை 96 இன்னிங்சில் 8 முறை டக் அவுட் ஆகி 2ம் இடத்தில் உள்ளார். எம்.கே.பட்டோடி 73 இன்னிங்சில் 7 முறை டக்அவுட் ஆகி 3ம் இடத்திலும், கபில்தேவ் 48 இன்னிங்சில் 6 முறை டக்அவுட் ஆகி 4ம் இடத்திலும் உள்ளார்.
ஆன்டர்சன்-கோலி
இங்கிலாந்தின் ஆன்டர்சனின் பந்துவீச்சுக்கு கோலி அடிக்கடி அவுட்டாகி வருகிறார். இதுவரை அவர் வீசிய 544 பந்துகளை சந்தித்துள்ள கோலி 6 முறை தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டியில் நடந்த இந்தியா-இங்கிலாந்து தொடரில் ஆன்டர்சனின் 50 பந்துகளை எதிர்கொண்ட கோலி வெறும் 19 ரன்கள் மட்டுமே சேகரித்தார். அதோடு 4 முறை அவுட்டானார்.
அதன்பிறகு அவரது பந்தை தனது நுணுக்கமான பேட்டிங்கால் பதம் பார்க்க ஆரம்பித்தார். இதற்கு சான்றாக 2018 ம் ஆண்டை கூறலாம். அப்போது 270 பந்துகள் சந்தித்த கோலி 114 ரன்கள் விளாசி ஒருமுறை கூட தனது விக்கெட்டை அவரிடம் பறிகொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் ஆன்டர்சனின் முதல் பந்திலேயே கோலி ‛கோல்டன்டக்’ ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்கள்: ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் சென்னை-மும்பை மோதல்; முழுவிபரம் உள்ளே
பிற கிரிக்கெட் செய்திகள்...
* 49, 99 வித்தியாசம் தெரியாத தவான்; உண்மையை உடைத்த யுவராஜ் சிங்...
* இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படமாட்டேன்; சுனில் கவாஸ்கர் இப்படி கூற காரணம் என்ன தெரியுமா
* நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கிரிக்கெட் ஹூரோ யார் தெரியுமா... முழுவிபரம் அறிய இதை படியுங்க...
* ‛நானும் பிராமின் தான்’; சுரேஷ் ரெய்னாவில் பேச்சால் வெடித்த சர்ச்சை
* இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் என்ன தெரியுமா... முழுவிபரம் இங்கே...
* தாடி வைத்தால் விவாகரத்து; யாருக்கும் அஞ்சாத ரிக்கி பாண்டிங் பயத்துடன் பகிர்ந்த சுவாரசிய தகவல்
* ஐ.பி.எல்.லில் கட்டிப்புடி வைத்தியம் தருவோம்... பிரித்தி ஜிந்தா குறித்து பெங்களூரு அணி கூறியது என்ன
ஒலிம்பிக் செய்திகள்...
* டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; புள்ளிபட்டியலில் எந்த இடம் தெரியுமா...
No comments