Header Ads

Header ADS

கொரோனா 3ம் அலை இம்மாதம் உருவாகும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்


மும்பை, ஆக.2-

இந்தியாவில் கொரோனா 3ம் அலை இந்த மாதம் (ஆகஸ்ட்) தொடங்கும் என ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

3ம் அலை எச்சரிக்கை

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. புதிது புதிதாய் உருமாறி மனிதர்களை தொடர்ந்து உருக்குலைக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா 2வது அலை உச்சம் அடைந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவில் கொரோனா 3ம் அலை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பல்வேறு மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் கேரளா, மராட்டிய மாநிலங்களில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்தபடி உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

இதனால் மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளை எச்சரித்து வருகிறது. கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே வராமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, தான் இந்தியாவில் கொரோனா 3ம் அலை தொடர்பாக ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்களான மதுகுமளி வித்யாசாகர்(ஐதராபாத்), மணிந்திரா அகர்வால்(கான்பூர்) ஆகியோர் தலைமையில் கணித முறையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பான அறிக்கை நேற்று வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இம்மாதம் தொடங்கி அக்டோபரில் உச்சம்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு 3ம் அலைக்கு வழிவகுக்கிறது. அதன்படி இந்த மாதத்தில்(ஆகஸ்ட்) இந்தியாவில் கொரோனா 3ம் அலை தொடங்கும். அக்டோபர் மாதத்தில் உச்சம் பெற வாய்ப்புள்ளது.

கொரோனா 2வது அலையை ஒப்பிடும்போது 3ம் அலையில் பாதிப்பு, பலி அதிகமாக இருக்காது. தினசரி பாதிப்பு 1 லட்சம் முதல் 1.50 லட்சமாக தான் இருக்கும். இது சற்று ஆறுதலான விஷயம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முந்தைய கணிப்பு சரியானது

இதற்கு முன்பு கொரோனா 2ம் அலை குறித்து மதுகுமளி வித்யாசாகர் ஆய்வு செய்திருந்தார். அவரது கணிப்புகள் சரியாக இருந்தன.

அதாவது இந்தியாவில் மே மாதம் 3 முதல் 5ம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என தெரிவித்திருந்தார். ஆனால் 2 நாட்கள் கூடுதலான நிலையில் மே 7 ல் (பாதிப்பு 4,14,188) அது சாத்தியமானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்க: ஆசியாவை ஆட்டிப்படைக்கு டெல்டா வைரஸ்; அடுத்த ஆப்பு இந்தியாவுக்கு தான்

தொடர்புடைய செய்திகள்...

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு

இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்

கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை

* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி

கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்

No comments

Powered by Blogger.