கலப்பு தடுப்பூசியால் கொரோனா எதிர்ப்பு திறன் அதிகரிப்பு; ஆய்வில் தகவல்
புதுடெல்லி, ஆக.,9–
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கலப்பால் மனிதர்களின் உடலில் கொரோனாவுக்கான நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்–வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரும் 2 டோஸ் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் செலுத்தி கொள்கின்றனர். கோவிஷீல்டு நோய் எதிர்ப்பு திறன் 70 சதவீதமாகவும், கோவாக்சின் எதிர்ப்பு திறன் 81 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் அவசரகால பயன்பாட்டுக்காக ஒரு டோஸ் தடுப்பூசியான ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆய்வு
இதற்கிடையே இருவேறு தடுப்பூசி மருந்துகளை கலந்து செலுத்தினால் அதன் நோய் எதிர்ப்பு திறன் எப்படி உள்ளது என்பது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. உத்தரபிரதேசத்தில் மே, ஜூன் மாதத்தில் இந்த ஆய்வு நடந்தது.
இதில் முதல் டோஸாக கோவிஷீல்டு, இரண்டாவது டோஸாக கோவாக்சின் செலுத்தி கொண்ட 18 பேர், 2 டோஸ் கோவிஷீல்டு, 2 டோஸ் கோவாக்சின் செலுத்திய தலா 40 பேர் என மொத்தம் 98 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் 2 டோஸ் கோவிஷீல்டு அல்லது 2 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களை ஒப்பிடும்போது ஒரு டோஸ் கோவிஷீல்டு, மற்றொரு டோஸ் கோவாக்சின் போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் டெல்டா உள்பட உருமாறிய பிற கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் அவர்களுக்கு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த ஆய்வு பற்றிய முழுவிவரம் இன்னும் வெளியிடப்படவில்லை
எதிர்ப்புக்கு இடையே ஆய்வு முடிவு
சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் கலப்பு தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதாவது கலப்பு தடுப்பூசி மருந்து செலுத்துவது பேராபத்தை விளைவிக்கும் என எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு முடிவு இப்படி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்கள்... வாட்ஸ்அப்பில் சில வினாடிகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி...
தொடர்புடைய செய்திகள்...
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்
* டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
No comments