Header Ads

Header ADS

கேல்ரத்னா விருது பெயர் மாற்றம்; யார் இந்த தயான் சந்த் தெரியுமா

 


புதுடெல்லி, ஆக.,7–

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருது

இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைக்கு உயரிய விருதாக ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது  வழங்கப்படுகிறது.  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பெயரில் இந்த விருது 1991–92ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

முதன்முதலில் ‘செஸ்’ வீரரான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், ஹாக்கி வீரர் தன்ராஜ்பிள்ளை, குத்துசண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட பலர் வாங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபருக்கு விருதுடன் ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

பெயர் மாற்றம்

இந்நிலையில் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுக்கு இந்திய ஹாக்கி அணியின் பிரபல வீரரான மறைந்த தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் விருதின் பெயர் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தயான்சந்த் சிலைக்கு மலர்தூவிய மோடி

இதற்கான அறிவிப்பை நேற்று பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த் பெயர் சூட்ட வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேல் ரத்னா விருதின் பெயர் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என அழைக்கப்படும். ஜெய்ஹிந்த்’’ என குறிப்பிட்டுள்ளார்.

 ஹாக்கியில் அசத்தல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில் பெண்கள் அணி 4ம் இடம் பிடித்துள்ளது. மேலும் ஒரு காலத்தில் ஹாக்கியில் அசைக்க முடியாத சக்தியாக சிறந்து விளங்கிய இந்திய அணி தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதை ஊக்கப்படுத்தவும், ஹாக்கியை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் விளையாட்டு துறையில் சிறந்த நபருக்கான விருது கேல்ரத்னாவுக்கு மறைந்த முன்னாள் வீரர் தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த பெயர் மாற்றத்துக்கு தயான்சந்த் மகன் அசோக் குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த தன் தந்தை காலம் காலமாக நினைவில் இருப்பார் என கூறியவர்  நாட்டு மக்களும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.

யார் இந்த தயான்சந்த்

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்த தயான்சந்த் 17 வயதில் ஹாக்கி விளையாட தொடங்கினார். 1926 முதல் 1949 வரை இந்திய ஹாக்கி அணியில் விளையாடினார். 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் ‘ஹாட்ரிக்’ முறையில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதில் முக்கிய பங்காற்றினார். 185 போட்டிகளில் விளையாடிய இவர் 570 கோல்கள் அடித்துள்ளார்.

இவர் பந்தை கடத்தி செல்வதில் வல்லவராக இருந்தார். இதனால் மந்திரவாதி, மாயவித்தைக்காரர் (The wizard, The magician) என்ற புனைப்பெயர்களில் அழைக்கப்பட்டார். இவருக்கு 1956ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 29ந் தேதி தான் இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்...

ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் சென்னை-மும்பை மோதல்; முழுவிபரம் உள்ளே



49, 99 வித்தியாசம் தெரியாத தவான்; உண்மையை உடைத்த யுவராஜ் சிங்...

இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படமாட்டேன்; சுனில் கவாஸ்கர் இப்படி கூற காரணம் என்ன தெரியுமா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கிரிக்கெட் ஹூரோ யார் தெரியுமா... முழுவிபரம் அறிய இதை படியுங்க...

* ‛நானும் பிராமின் தான்’; சுரேஷ் ரெய்னாவில் பேச்சால் வெடித்த சர்ச்சை

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் என்ன தெரியுமா... முழுவிபரம் இங்கே...

தாடி வைத்தால் விவாகரத்து; யாருக்கும் அஞ்சாத ரிக்கி பாண்டிங் பயத்துடன் பகிர்ந்த சுவாரசிய தகவல்

ஐ.பி.எல்.லில் கட்டிப்புடி வைத்தியம் தருவோம்... பிரித்தி ஜிந்தா குறித்து பெங்களூரு அணி கூறியது என்ன

ஒலிம்பிக் செய்திகள்...



டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; புள்ளிபட்டியலில் எந்த இடம் தெரியுமா...

* ‛டக், கோல்டன் டக்’ அவுட்டானதில்  கோலி முதலிடம்; டோனியை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனை

No comments

Powered by Blogger.