Header Ads

Header ADS

டோனியின் டுவிட்டரில் ‛ப்ளுடிக்’ நீக்கம்; மீண்டும் சேர்க்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா

 

ஜார்கண்ட், ஆக.,6–

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ‛தல’டோனியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென்று ‘ப்ளுடிக்’ நீக்கம் செய்யப்பட்ட நிலையில்  அடுத்த சில மணிநேரத்தில் மீண்டும் ‛ப்ளுடிக்’ சேர்க்கப்பட்டது.

‛தல’ டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ‘தல’ டோனி. 2020 ஆகஸ்ட் 15ல் சர்வதேச போட்டிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வருகிறார்.

அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கும் ஐ.பி.எல்., போட்டியில் களம் காண உள்ளார். சில நாட்களுக்கு முன்பு டோனியின் வித்தியாசமான ‛சிகை’ அலங்கார போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின.

டுவிட்டரில் நீக்கம்

இந்நிலையில் டோனியின் டுவிட்டர் பக்கத்துக்கு ‘ப்ளூ டிக்’ வழங்கப்பட்டு இருந்தது. அதாவது டோனியின் உண்மையான டுவிட்டர் பக்கம் இதுதான் என்பதை verify செய்ததன் அடையாளமாக இந்த டிக் கொடுக்கப்பட்டு இருந்தது. பொதுவாக பிரபலமான நபர்கள் அனைவருக்கும் இந்த ‛ப்ளூடிக்’ கொடுக்கப்பட்டு இருக்கும்.

இதற்கிடையே தான் டோனியின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று ‘ப்ளூ டிக்’  நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான காரணத்தை டுவிட்டர் நிறுவனம் கூறவில்லை. மாறாக கடைசியாக 2021 ஜனவரி 8 ல் பதிவு ஒன்றை செய்தார். அதன்பிறகு எந்த பதிவையும் போடவில்லை. இதனால் நீண்ட நாட்களாக டோனி டுவிட்டரை பயன்படுத்தாமல் இருந்தது தான் காரணமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது.

 ரசிகர்கள் எதிர்ப்பு; மீண்டும் ‛ப்ளூடிக்’

இதற்கு டோனி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் டுவிட்டருக்கு எதிராக பல்வேறு பதிவுகளை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக திடீரென்று டோனியின் டுவிட்டர் பக்கத்துக்கு மீண்டும் ‛ப்ளூடிக்’ வழங்கப்பட்டது. ரசிகர்களும் சாந்தமாகினர். இருப்பினும் டோனியில் டுவிட்டர் பக்கத்தில் ‛ப்ளூடிக்’ நீக்கி மீண்டும் சேர்க்கப்பட்டதற்கான எந்த விவரமும் முறையாக வெளியிடவில்லை. டோனியை தற்போது டுவிட்டரில் 8.2 மில்லியன் பேர் Follow செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்: விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்; யார் இந்த தயான்சந்த் தெரியுமா

பிற செய்திகள்...

ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் சென்னை-மும்பை மோதல்; முழுவிபரம் உள்ளே



49, 99 வித்தியாசம் தெரியாத தவான்; உண்மையை உடைத்த யுவராஜ் சிங்...

இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படமாட்டேன்; சுனில் கவாஸ்கர் இப்படி கூற காரணம் என்ன தெரியுமா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கிரிக்கெட் ஹூரோ யார் தெரியுமா... முழுவிபரம் அறிய இதை படியுங்க...

* ‛நானும் பிராமின் தான்’; சுரேஷ் ரெய்னாவில் பேச்சால் வெடித்த சர்ச்சை

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் என்ன தெரியுமா... முழுவிபரம் இங்கே...

தாடி வைத்தால் விவாகரத்து; யாருக்கும் அஞ்சாத ரிக்கி பாண்டிங் பயத்துடன் பகிர்ந்த சுவாரசிய தகவல்

ஐ.பி.எல்.லில் கட்டிப்புடி வைத்தியம் தருவோம்... பிரித்தி ஜிந்தா குறித்து பெங்களூரு அணி கூறியது என்ன

‛டக், கோல்டன் டக்’ அவுட்டானதில்  கோலி முதலிடம்; டோனியை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனை

ஒலிம்பிக் செய்திகள்...



டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; புள்ளிபட்டியலில் எந்த இடம் தெரியுமா...

No comments

Powered by Blogger.