இந்தியா-பாகிஸ்தானில் எது பலம் வாய்ந்தது; அக்தர் கூறியது என்ன
துபாய், அக்.,23-
உலககோப்பை டுவெண்டி20 கிரிக்கெட்டில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பலம்வாய்ந்த அணி எது என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் கூறியுள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
நாளை இந்தியா-பாகிஸ்தான்
உலககோப்பை டுவெண்டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று தொடங்க உள்ளன. அபுதாபியில் மதியம் 3.30 மணிக்கும் துவங்கும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டி துபாயில் இரவு 7:30 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியதாவது:
யார் பலம்
வரலாற்றை உற்றுநோக்கினால் உலககோப்பை போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது இல்லை. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது போட்டி நாளில் வீரர்கள் விளையாடுவதே பொறுத்தே அமைகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்திய வீரர்கள் ஐ.பி.எல்., விளையாடியுள்ளனர். இது உலககோப்பை டி20 போட்டிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். பாகிஸ்தானை ஒப்பிடும்போது இந்தியா பலமாகவே உள்ளது. இதனால் இந்தியாவை, பாகிஸ்தான் வீழ்த்தினால் ஆச்சரியமளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments