மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு; விண்ணப்பம் செய்வது எப்படி
மதுரை, அக்.,23-
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., மற்றும் 11, 12ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
காலியிடங்கள்
எல்.கே.ஜி., யூ.கே.ஜி., ஆசிரியர் பணியிடங்கள் - 63
11, 12ம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் - 31 (கணினி அறிவியல் 9, வணிகவியல் 13, வணிக கணிதம் 3, பொருளியல் 4, அரசியல் அறிவியல் 2)
மொத்த காலியிடங்கள் 94
கல்வி தகுதி
11, 12ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் முதுகலை பட்டத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும். எல்.கே.ஜி., யூ.கே.ஜி., ஆசிரியர்கள் 12ம் வகுப்புடன் மாண்டிச்சோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்
எல்.கே.ஜி., யூ.கே.ஜி., ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், 11, 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் வரை கிடைக்கும்.
தேர்வு முறை
நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சுயவிவரபடிவம், புகைப்படம், உரிய சான்றிதழ்களுடன் ஆணையாளர், மதுரை மாநகராட்சி, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை 625002 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பிக்க அக்டோபர் 27 கடைசிநாளாகும்.
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு www.newsthendral.com இணையதளத்தோடு இணைந்திருங்கள்.
👍👍👍
ReplyDelete