மதம் மாற்ற வந்தால் தலையை வெட்டுங்க... சாமியார் பேச்சால் வெடித்த சர்ச்சை
நமது நிருபர்-
"மதமாற்றம் செய்ய வருவோரின் தலையை கோடரியால் வெட்டிவிடுங்கள்" என பிரபல சாமியார் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
கண்டன கூட்டம்
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக கண்டன கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரபல சாமியார் பரமாத்மானந்த், பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் பேசியது:
நான் ஒரு துறவி. எதை பற்றியும் கவலை இல்லை. நம் வீடுகளில் கோடரி வைத்துள்ளோம். அது எதற்காக என்றால், மத மாற்றம் செய்ய வருவோரின் தலையை வெட்டத்தான். ஒரு சாமியராக இருந்து கொண்டு வெறுப்பை தூண்டுவதாக என் மீது குற்றம்சாட்டலாம். சில நேரங்களில் தீயை பற்ற வைக்க வேண்டிய தேவை உள்ளது.
சர்ச்சை புதிதல்ல
வீடு, தெரு, கிராமம் எங்கேயாவது மதமாற்றம் செய்வோரை பார்த்தால் மன்னிப்பு கொடுக்க வேண்டாம். முதலில் தடுத்து நிறுத்துங்கள். எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
சாமியாரின் பேச்சு பெரும் சர்சையாக வெடித்துள்ளது. இவருக்கு சர்ச்சை புதிதல்ல. ஏற்கனவே, ஹரியானாவில் பசு பாதுகாப்பு சங்கத்தால் பெஹலுகான் என்பவர் கொல்லப்பட்டதை இவர் ஆதரித்து பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
No comments