சொக்கப்பனையில் தோன்றிய முருகன்; மயிலப்பபுரத்தில் பக்தர்கள் பரவசம்
தென்காசி, நவ.20-
தென்காசி அருகே உள்ள மயிலப்பபுரம் சுப்பிரமணியசுவாமி கோயில் முன் நடந்த சொக்கப்பனை நிகழ்ச்சியில் ஒளிவடிவில் முருகன் அருள்பாலித்ததாக பக்தர்கள் பரவசத்துடன் கூறினர்.
பிரசித்திபெற்ற கோயில்
தென்காசி மாவட்டம் ஆவுடையானூருக்கு அடுத்த மயிலப்பபுரத்தில் பழமையான சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. கோயிலில் கருப்பசாமிக்கு தனி சன்னதி இருப்பதோடு, நவக்கிரஹ மண்டபம் உள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி விசாக திருவிழா பிரசித்த பெற்றது. அப்போது கோயிலில் சப்பர ஊர்வலம், திருக்கல்யாண வைபோகம், உச்சிக்கால பூஜையுடன் அன்னதானம் நடக்கும்.
விழாவில் நடக்கும் விளக்குபூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வர். மயிலப்பபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் பங்கேற்று சுவாமியை வழிபடுவர். மேலும் முருகனுக்கு உகந்த தினங்களில் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.
சொக்கப்பனையில் அருள்பாலித்த முருகன்
கார்த்திகை தீபதிருநாளில் ஆண்டுதோறும் கோயில் முன்பு சொக்கப்பனை நிகழ்ச்சி நடக்கும். அந்த வகையில் ‛வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷத்துடன் இந்த ஆண்டும் நேற்று முன்தினம் இரவு சொக்கப்பனை நிகழ்ச்சி நடந்தது. தயாராக இருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது.
பனைஓலையில் கொளுந்து விட்டு எரிந்த தீயில் ஒளி வடிவில் குழந்தை உருவில் முருகன் அருள்பாலித்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக படமும் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
எங்கள் முகநுால் (FACEBOOK) பக்கத்தில் இணைய Click here
பிற வேலைவாய்ப்பு
விளையாட்டு செய்திகள்
* மகனால் டிராவிட்டுக்கு கிடைத்த பயிற்சியாளர் பதவி; கங்குலி கூறியது என்ன...
* பாகிஸ்தானில் இந்திய வீரர்களில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்; முன்னாள் வீரர் அக்தர் மனம்திறப்பு...
* ‛நானும் பிராமின் தான்’; சுரேஷ் ரெய்னா பதிலால் சர்ச்சை
No comments