ஒமிக்ரான் வைரஸ் ஏன் மிகவும் ஆபத்தானது; மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
ஜோகனஸ்பர்க், நவ.,28–
‛ஒமிக்ரான்’எனும் கொரோனா வைரஸ் ஏன் ஆபத்தானது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.அதன் விபரம் வருமாறு:–
தென்ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’
சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்று வரை ஓயவில்லை. புதிதாக உருமாற்றம் அடைந்து பொதுமக்களை தாக்கி வருகிறது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ எனும் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பேரிடர் தொடங்கியது முதல் மரபணு மாற்றமடைந்த வைரஸ்களின் வரிசையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகியவை தான் அச்சுறுத்தலாக இருந்தன.
இந்த வரிசையில் ‘ஒமிக்ரான்’ வைரசும் இணைந்துள்ளது. இதனால் தான் ‘‘ ‛ஒமிக்ரான்’ வைரஸ் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். அலட்சியம் காட்டினால் மீண்டும் பொதுமுடக்கத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகும்’’ என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
50 இடங்களில் உருமாற்றம்
இதுபற்றி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது :
‛தென்ஆப்பிரிக்காவில் ‛ஒமிக்ரான்’ எனும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. முதன் முதலாக சீனாவில் தாக்கிய கொரோனா வைரஸில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை கண்டறியப்பட்ட மரபணு மாற்ற வைரஸ்களில் அதிகளவில் உருமாற்றம் பெற்றிருப்பது இதுதான்.
இதனால் தான் பிற வைரசை காட்டிலும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே இது கவலையளிக்க கூடிய வைரஸ். ‘‘ஒமிக்ரான்’’ வைரசுக்கு எதிராக தற்போதைய கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருக்கலாம். இதனால் தான் இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’’
இவ்வாறு கூறியுள்ளனர்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
No comments