எழுத்து தேர்வின்றி அரசு வேலை; மாத சம்பளம் ரூ.1.12 லட்சம்
சென்னை, நவ.14-
தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் ஆட்சேர்ப்பு வாரியம்(டி.என். எம்.ஆர்.பி.) சார்பில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
பணியின் பெயர்
Laboratory Technician Grade - II
காலியிடங்கள்
மொத்தம் 19 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.
சம்பளம்
மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை கிடைக்கும்
பணியிடம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நியமனம் செய்யப்படுவர்.
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் விண்ணப்பத்தாரர்கள் B.sc Chemistry or Biochemistry அல்லது Diplomo in Medical Laboratory Technician Course முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், OC பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதும், SC/ST/SCA/BC/BCM/MBC&DNC பிரிவினர் அதிகபட்சம் 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
SC/SCA/ST/DAP(PH) பிரிவினருக்கு ரூ.300, மற்றவர்களுக்கு ரூ.600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
கல்லூரி மதிப்பெண் மற்றும் டெக்னிக்கல் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப முறை
தகுதி, விருப்பம் உள்ளவர்கள் TN MRB இணையதளமான mrb.tn.gov.in இணையதளம் மூலம் 2021 நவ.,30ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கூடுதல் விபரங்கள் அறிய : Click here
விண்ணப்பம் செய்ய : Click here
எங்கள் முகநுால் (FACEBOOK) பக்கத்தில் இணைய Click here
No comments