தீபாவளி தங்கம் விற்பனை எவ்வளவு; வர்த்தகத்தில் இந்தியா புதிய சாதனை
புதுடெல்லி, நவ.,6-
இந்தியாவில் தீபாவளியையொட்டி ரூ.1.25 லட்சம் கோடிக்கு வர்த்தம் நடந்துள்ளது. இதில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி பொருட்கள் விற்பனையாகினது.
தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை நவ.,4ல் கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் மிளிர, பட்டாசுகள் சிதற ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர்.
முன்னதாக ஒரு மாதத்துக்கு முன்பே புத்தாடை, பட்டாசு, நகைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க துவக்கி விட்டனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு இனிப்பு, கார வகைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ரூ.1.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
இந்நிலையில் இந்தியாவில் தீபாவளியையொட்டி ரூ.1.25 லட்சம் கோடிக்கு வர்த்தம் நடந்துள்ளது என அனைத்திந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு (CAIT) கூறியுள்ளது.
இந்த கூட்டமைப்பின் பொது செயலாளர் பிரவீன் கான்டில்வால் கூறியதாவது:
10 ஆண்டுகளில் அதிகம்
தீபாவளியையொட்டி இந்தியாவில் வழக்கமாக ரூ1 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி இந்தியாவில் ரூ.1.25 லட்சம் கோடிக்கு வர்த்தம் நடந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதது. டெல்லியில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது.
இந்த முறை இந்தியாவில் சீன பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை. இந்தியாவில் உற்பத்தியான பொருட்கள் தான் விற்கப்பட்டது. இதன்மூலம் சீனாவுக்கு நேரடியாக ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.
ரூ.9 ஆயிரம் கோடி
தீபாவளியையொட்டி தங்கம், வெள்ளி பொருட்களின் வர்த்தம் ரூ.9 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளது. பார்சல் செய்வதற்கான மூலப்பொருட்கள் ரூ.15 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இந்த தீபாவளியில் பாரம்பரிய பொருட்களை அதிகமாக விரும்பி வாங்கினர். மண்விளக்கு, மண்பாண்ட பொருட்கள், வீட்டு நுழைவுவாயிலுக்கான அலங்கார பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தன. இது சிறிய கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்: விடுமுறை நாட்களிலும் இனி சம்பளம் கிடைக்கும். ரிசர்வ் வங்கி புதுஉத்தரவு
வேறு செய்திகள்
* பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 3ம் இடம்; போர்ப்ஸ் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது
No comments