ரூ.1.77 லட்சத்தில் விமானப்படையில் வேலை; டிகிரி, என்ஜினியரீங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு
புதுடெல்லி, டிச.5-
இந்திய விமானப்படையில் ஏராளமான பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்விபரம் வருமாறு:
பணியின் பெயர்
Commissioned Officers in Flying and Ground
காலியிடங்கள்
மொத்தம் 317 இடங்கள் நிரப்பப்பட உள்ளன
கல்வி தகுதி
பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் பாடத்தில் 50 சதவீதம் எடுத்து இருப்பதோடு, 50 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏரோனேட்டிக்கல் பிரிவில் பி.இ., பி.டெக் படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
2023 ஜனவரி 1 நிலவரப்படி குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.56,100ம் அதிகபட்சமாக ரூ.1,77,500ம் கிடைக்கும்.
தேர்வு முறை
எழுத்து, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. தகுதி, விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்கள் அறிய Click here or Click here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click here
பிற செய்திகள்....
ZOHO நிறுவனத்தில் தென்காசியில் வேலை; டிகிரி, என்ஜினியரீங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு
No comments