கேப்டன் பொறுப்பில் கோலி விடுவிப்பு; பாகிஸ்தான் வீரர் கடும் எதிர்ப்பு
கராச்சி, டிச.,15-
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‛‛கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதன் மூலம் இளம்வீரர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேப்டன் பொறுப்பில் கோலி விடுவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியில் 3 வித போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். சமீபத்தில் அவர் டுவெண்டி20 போட்டி கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். தற்போது ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் ரோஹித் ஷர்மா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பி.சி.சி.ஐ.யின் இந்த செயலுக்கு விராட் கோலி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை திட்டி தீர்க்கின்றனர்.
சல்மான் பட் கண்டனம்
இந்நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விடுவிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான சல்மான் பட் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:
வெற்றி எண்ணத்தில் விலகாத கோலி
இந்தியாவின் விராட் கோலி 70 சதங்கள் விளாசியுள்ளார். தற்போதைய இந்திய அணியின் ஒட்டுமொத்த வீரர்கள் அடித்த சதத்தின் கூட்டுத்தொகை 70யை தொடவில்லை. 30 வயதிலேயே இந்த சாதனைக்கு கோலி சொந்தக்காரராக ஆகினார்.
கோலி தொடர்ந்து டக் அவுட் ஆகவில்லை, தவறான ஷாட்டுகள் ஆடவில்லை, போட்டியில் தோல்வியை தழுவவில்லை. அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து அவர் சிறிதும் விலகியது கிடையாது. அவரது சராசரி, ஸ்ட்ரைக்ரேட் ஆகியவற்றை ஒருபோதும் குறையவிட்டது இல்லை. நிறைய டெஸ்ட் போட்டிகளில் இக்கட்டான சூழலில் நன்றாக ஆடியுள்ளார்.
மனம் ஏற்க மறுக்கிறது
தற்போது கோலி இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கே இந்நிலை என்றால் மற்ற வீரர்களின் நிலை என்ன. இத்தகையை சூழலை எதிர்கொள்ளாமல் இருக்க பிற வீரர்கள் என்ன செய்ய வேண்டும். நன்கு விளையாடும் கோலியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பறித்ததன் மூலம் இளம்வீரர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
கிரிக்கெட்டில் எதுவும் நிரந்தரமில்லை. புதிதாக கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து வீரர்களுக்கும் கோலியின் நிலைமை ஒரு எடுத்துக்காட்டு. என்னை பொறுத்தவரை ஒரு விளையாட்டு வீரராக கோலி தன்னால் முடிந்ததை செய்தார். அவருக்கு இந்நிலை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிற செய்திகள்...
* 49, 99 வித்தியாசம் தெரியாத தவான்; உண்மையை உடைத்த யுவராஜ் சிங்...
* இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படமாட்டேன்; சுனில் கவாஸ்கர் இப்படி கூற காரணம் என்ன தெரியுமா
* நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கிரிக்கெட் ஹூரோ யார் தெரியுமா... முழுவிபரம் அறிய இதை படியுங்க...
* ‛நானும் பிராமின் தான்’; சுரேஷ் ரெய்னாவில் பேச்சால் வெடித்த சர்ச்சை
* இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் என்ன தெரியுமா... முழுவிபரம் இங்கே...
* தாடி வைத்தால் விவாகரத்து; யாருக்கும் அஞ்சாத ரிக்கி பாண்டிங் பயத்துடன் பகிர்ந்த சுவாரசிய தகவல்
* ஐ.பி.எல்.லில் கட்டிப்புடி வைத்தியம் தருவோம்... பிரித்தி ஜிந்தா குறித்து பெங்களூரு அணி கூறியது என்ன
* ‛டக், கோல்டன் டக்’ அவுட்டானதில் கோலி முதலிடம்; டோனியை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனை
Play'n GO Casino Site | Lucky Club
ReplyDeletePlay'n GO Casino is a brand-new online casino which you can find on most sites. The website has an impressive design luckyclub.live that allows you to create instant play,