Header Ads

Header ADS

குற்றாலத்தில் குளிக்க தடை; கலெக்டர் ‛திடீர்’ உத்தரவு



தென்காசி, டிச.,27-

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க டிச.,31 முதல் தடை விதித்து கலெக்டர் கேபாலசுந்தர்ராஜ் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்றால அருவிகள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முதன்மையானது குற்றாலம். மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்பட இன்னும் பல அருவிகள் உள்ளன. அருவிகளில் குளிக்க எப்போதும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் தான் கொரோனா பரவலால் 2020 மார்ச் மாதம் முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு பாதியில் இருந்து அருவியில் தண்ணீர் கொட்டும் அழகை பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில் அருவிகளில் வெள்ளமாக நீர் கொட்டியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் தான் கொரோனா குறைந்த நிலையில் மீண்டும் அருவிகளில் குளிக்க டிச.,20 முதல் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர். ஐயப்ப சாமி பக்தர்களும் ஆர்வமாய் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மீண்டும் குளிக்க தடை

இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 3ம் அலையை உருவாக்கி மீண்டும் ஊரடங்குக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது.

இதனால் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க 3 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தென்காசி கலெ க்டர் கோபால சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ளார்.


தொற்று பரவலை தடுக்க...

அந்த அறிவிப்பில், ‛‛தொற்று நோய் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி(மெயின்அருவி), ஐந்தருவி, பழைய குற்றால அருவிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் டிசம்பர் 31 முதல் 2022 ஜனவரி 2ம் தேதி வரை 3 நாட்கள் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.