10முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி; புதிய அறிவிப்பு வெளியானது
புதுடெல்லி, ஜன.2-
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.ஏ.ஆர்.) இயங்கி வருகிறது. இதன் உறுப்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலிப்பணியிடங்கள்
டெக்னீஷியன் (டி–1) பதவிக்கு மொத்தம் 641 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெட்ரிக்குலேஷன்(10ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
10:01:2021 தேதிப்படி விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஐ.சி.ஏ.ஆர்., வழக்கமான ஊழியர்களுக்கு சேவை செய்வதற்கான அதிகபட்ச வயது 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
UR/OBC-NCl(NCl)/EWS தரப்புக்கு ரூ.1000, Women/schedule caste/ Schedule tribe/Exservicemen/ preson with Benchmark Disability ஆகியோருக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
விண்ணப்பத்தாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப முறை
www.iari.res.in இணையதள முகவரி மூலம் 10.01.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Official Website Click here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click here
No comments