ஒமிக்ரான் வைரஸ் லேசானது அல்ல; WHO எச்சரிக்கை
ஜெனீவா, ஜன.,8-
‛‛ஒமிக்ரான் வைரஸ் லேசானது அல்ல. இதை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது’’ என உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் குறித்து அவர் கூறியதாவது:
லேசான வைரஸ் அல்ல
ஒமிக்ரான் கொரோனா வைரஸின் பாதிப்ப, டெல்டா வைரஸை காட்டிலும் குறைவாக உள்ளது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எளிதில் மீண்டு வருகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம். எனினும் ஒமிக்ரான் வைரஸை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது.
ஏனென்றால் 2 ஆண்டு கொரோனா பேரிடரில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு கடந்த 7 நாட்களில் தான் பதிவாகியுள்ளது. இதற்கு சுனாமி வேகத்தில் பரவும் ஒமிக்ரான் தான் காரணம். கொத்து கொத்தாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு எண்ணிக்கையை உலக சுகாதார நிறுவனம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. முந்தைய மரபணு மாறிய வைரஸ்கள் போலவே ஒமிக்ரானும் மக்களை மருத்துவமனையில் சேர்க்க வைக்கிறது. மரணத்தை ஏற்படுத்துகிறது.
தடுப்பூசி பகிர்வு முக்கியம்
கொரோனா தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை பார்க்கும்போது 2022 ஜூலையில் 109 நாடுகள் 100 சதவீத இலக்கை அடைவதில் சிரமம் இருக்கும். இந்த நாடுகளில் 70 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியவர்களாக இருப்பர். சில நாடுகளில் தற்போது ஒருவருக்கே 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பல நாடுகளில் முன்கள பணியாளர்களுக்கே தடுப்பூசி கிடைக்காத நிலை உள்ளது.
இந்த ஏற்றதாழ்வால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதை சரிசெய்யாவிட்டால் நோய் பரவலை முற்றிலும் தடுப்பது சிரமம். எனவே தடுப்பூசி பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ உபகரணங்களை நாடுகளுக்குள் பகிர்ந்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து அனைவருக்கும் வழங்குவதன் மூலம் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்புகளை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்...
* ஒமிக்ரான் வைரஸால் இந்தியாவில் கொரோனா 3ம் அலை; சி.ஐ.எஸ்.ஆர்., புதுக்குண்டு
* கொரோனா புதிய வைரஸ் கிளம்பியது எங்கிருந்து... உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன...
* ஒமிக்ரான் வைரஸ் ஏன் வீரியமானது; மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு; தமிழகத்துக்கு மத்திய குழு வருகை
No comments