Header Ads

Header ADS

மறுபடியும் கொரோனாவா...! இந்தியாவை தாக்கும் கோவிட் 4ம் அலை... 4 மாதம் ஆட்டம் காட்டுமாம்...


கான்பூர், மார்ச் 3-

இந்தியாவை மீண்டும் கொரோனா தாக்க உள்ளது. ஜூன் மாதம் நான்காம் அலை தொடங்கும். நான்கு மாதங்களுக்கு பாதிப்பு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவை இதுவரை 3 கோவிட் அலைகள் தாக்கியுள்ளன. 4.30 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3ம் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் குறைவுதான்.


நாடு முழுவதும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. பாதிப்பு குறைந்ததால், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ளது.


கோவிட் 4ம் அலை


அதற்குள் எடுத்த எச்சரிக்கை மணி வந்துவிட்டது. ஆம், இந்தியாவை ஜூன் மாதம் கோவிட் 4ம் அலை தாக்கப் போகிறதாம். கான்பூர் ஐஐடி நிறுவனம் எச்சரித்துள்ளது.


ஜூன் மாதம் 22ந்தேதியில் இந்த 4ம் அலை தொடங்கலாம். ஆகஸ்ட் மாதம் இடையில் அல்லது இறுதியில் பாதிப்பு உச்சம் அடையும். ஜூன் முதல் 4 மாதங்கள் இந்த அலை நீடிக்கும் எனவும் ஐஐடி கான்பூர் கணித்துள்ளது.


ஒமிக்ரான் ஆட்டம்


இந்தியாவில் 3ம் அலையை ஏற்படுத்திய ஒமிக்ரான், உலகம் முழுவதும் தாண்டவமாடியது. பல இடங்களில் 4, 5 அலைகள் ஏற்பட்டன. ஒமிக்ரானோடு எல்லாம் முடிந்து விடும் என உலகம் எதிர்பார்த்தது.



ஆனால், இது கடைசி வைரஸ் அல்ல. இன்னும் வைரஸ்கள் வரும் என ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.


,

No comments

Powered by Blogger.