Header Ads

Header ADS

ஐபிஎல்: சகாலை 15வது மாடியில் தொங்கவிட்ட மும்பை வீரர்... குடிபோதையில் நடந்த திக்திக் சம்பவம்



மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியபோது குடிபோதையில் சகவீரர் தன்னை 15வது மாடி பால்கனியில் தொங்கவிட்டு அச்சுறுத்தினார்’’ என  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய வீரர் யுஸ்வேந்திர சகால் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சகால். லெக்ஸ் ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்.

இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழைந்து திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி விளையாடி வருகிறார். 

ஜாலியான சகால்

அனைவரிடமும் ஜாலியாக பேசி கலாய்க்கும் சகால் டிக்டாக் வீடியோவிலும் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இன்ஸ்டகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இவர் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இவரை ஏராளமான ரசிர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.


ராஜஸ்தான் அணியில் சகால்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 15வது சீசனில் சகால் ராஜஸ்தான் அணிக்கு விளையாடி வருகிறார்.இதற்கு முன்பு அவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். முன்னதாக ஐபிஎல் துவக்க காலத்தில் சகால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.


அஸ்வினுடன் உரையாடல்

இந்நிலையில் தான்  அவர் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தபோது சந்தித்த  ஒரு திக்திக் சம்பவம் குறித்து கூறியுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக தற்போது இந்தியாவின் மற்றொரு சுழற்பந்து ஜாம்பவான் ரவிசந்திர அஸ்வின், கருண் நாயர் ஆகியோரடன் சகால் உரையாடினார். அப்போது சகால் கூறியதாவது:


பால்கனியில் தொங்கவிட்ட வீரர்

‛‛நான் கூறப்போகும் இந்த சம்பவத்தை சில வீரர்கள் அறிந்து இருக்கலாம். இதுபற்றி நான் இதுவரை வெளியில் கூறியது இல்லை. 2013ல் நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினேன். பெங்களூருவில் போட்டி இருந்தது. போட்டி முடிந்த பிறகு ஓட்டலில் மதுபோதையில் சகவீரர் ஒருவர் என்னை தூக்கி 15வது மாடியின் பால்கனியில் தொங்கவிட்டார். பாதுகாப்பு கருதி நான் அந்தவீரரை கெட்டியாக இறுக்கி பிடித்து கொண்டேன். சகவீரர்கள் தான் என்னை மீட்டனர்.

தவறு நடந்தால் விழுந்திருப்பேன்

நான் மரணத்தின் அருகே சென்றுவிட்டு வந்துள்ளேன். அந்த வீரரின் பெயரை நான் கூற விரும்பவில்லை. இந்த சம்பவத்தின்போது சின்ன தவறு நடந்து இருந்தாலும்  நான் 15வது மாடியில் இருந்து கீழே விழுந்து இருப்பேன். நான் சந்தித்த மோசமான அனுபவம் இதுதான். இதன்மூலம் நான் ஒன்றை தெரிந்து கொண்டேன். நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே நான் கற்று கொண்டேன்.’’ என கூறியுள்ளார்.

வீடியோ வெளியீடு

இதுதொடர்பான வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே சகாலை தூக்கி தலைகீழாக தொங்கவிட்ட வீரர் யார் என ரசிகர்கள் சிந்திக்க தொடங்கி உள்ளனர். மேலும், அந்த வீரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


2வது இடத்தில் சகால்

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சகால் விளையாடுகிறார். இந்த சீசனில் இதுவரை 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.