Header Ads

Header ADS

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யாவுக்கு 2வது திருமணம்! அவர் போட்ட கண்டிஷன் தெரியுமா?

ஐதராபாத்: சமந்தாவுடனான விவாரத்தை தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா 2வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வீட்டில் பெண் பார்க்கும் படலம் துவங்கிய நிலையில் பெற்றோரான நாகார்ஜூன்-அமலா தம்பதியிடம் நாகசைதன்யா ஒரு கண்டிஷனை விதித்துள்ளார்.

தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜூன். இவரது மனைவி அமலா. நடிகையான இவரும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த தம்பதியின் மகன் நாகசைதன்யா. நடிகரான இவருக்கும் சமந்தாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

சமந்தா-நாகசைதன்யா திருமணம்

அதன்பிறகு நாகசைதன்யா-சமந்தா ஆகியோரின் திருமணம் 2017 ல் நடந்தது. இனிமையாக சென்ற இல்லற வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 பேரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.

விவாகரத்து

இதையடுத்து  நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். விவாகரத்தான பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பல செய்திகள் வெளியாகின. இதுபற்றி இருகுடும்பத்தினரும் எந்த விபரங்கைளையும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

நாகசைதன்யா 2வது திருமணம்

இதையடுத்து இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தான் தற்போது நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


கண்டிஷன் என்ன?

அதாவது நாகசைதன்யாவின் பெற்றோரான நாகார்ஜூன் மற்றும் அமலா இருவரும் நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர். இதுபற்றி அவர்கள் நாகசைதன்யாவிடம் கூறியுள்ளனர். அவரும் ஒகே சொல்லிவிட்டதாகவும்,  ஆனால் நடிகை வேண்டாம் என்றும் கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்ப்பார்ப்பு

இதன்மூலம் நாகசைதன்யாவுக்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியுள்ளது. மேலும் அவரது திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.