பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் தேர்வு; காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் சீண்டல்
ஷெபாஸ் ஷெரீப், இம்ரான்கான் |
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்த நிலையில் புதிய பிரதமாரக ஷெபாஷ் ஷெரீப் ஒருமனதாக தேர்வாகி உள்ளார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் சீண்ட துவங்கியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி வகித்து வந்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இம்ரான்கானுக்கு ஆதரவு வழங்கிய கூட்டணி கட்சியினர் விலகினர்.
இம்ரான்கானின் கட்சி எம்பிக்களுக்கு அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் இக்கட்டன சூழலை இம்ரான்கான் சந்தித்தார்.
இம்ரான்கான் தோல்வி
மேலும் பார்லிமென்டில் இம்ரான்கானுக்கான பெரும்பான்மைக்கான ஆதரவு குறைந்தது. இதனால் இம்ரான்கான் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இம்ரான்கான் |
இதனை முறியடிக்கும் நோக்கத்தில் இம்ரான்கான் வியூகம் வகுத்தார். ஆனால் அவரால் வெற்றிபெறவில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வியடைந்தார்.
புதிய பிரதமருக்கு போட்டி- ராஜினமா
புதிய பிரதமர் தேர்வில் போட்டியிட எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் வேட்பு மனு தாக்கல் செய்தார். இம்ரான் கட்சி சார்பில் முகமது குரேஷி களம் இறக்கப்பட்டார். இரவு ஓட்டெடுப்பு நடக்க இருந்தது.
இதற்கிடையே தனது கட்சியின் அனைத்து பார்லிமென்ட் உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதாக திடீரென இம்ரான்கான் அறிவிப்பு வெளியிட்டார். 'வெளிநாட்டு சதியால் ஒருவர் பிரதமராவதை ஏற்க முடியாது. 2,400 கோடி ரூபாய் கொள்ளையடித்த திருடன் அருகே நாங்கள் உட்காரமாட்டோம்' என ஆவேசமாக கூறினார்.
ஷெபாஷ் ஷெரீப் தேர்வு
இந்நிலையில் புதிய பிரதமர் தேர்வுக்காக பார்லிமென்ட் கூடியது. இம்ரான் கட்சி வேட்பாளர் முகமது குரேஷி பேசினார். தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
ஷெபாஸ் ஷெரீப் |
போட்டியின்றி புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வானார். பதவி கிடைத்த கையோடு அவர் பாகிஸ்தான் பார்லிமென்டில் இன்று பேசினார். அப்போது அவர் காஷ்மீர் பிரச்னை, இந்திய உறவு குறித்தும் குறிப்பிட்டார். இதுபற்றி ஷெபாஷ் ஷெரீப் பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சனை
இந்தியாவுடன் நல்லுறவு பேண விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இது நடக்காது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சர்வதேச அரங்கில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவோம்.
2 நாடுகளின் ஏழ்மையை புரிந்து கொள்ள மோடிக்கு அறிவுரை வழங்குவேன். ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்துவேன். அதன் பிறகு இணைந்து வறுமையை ஒழிக்க அழைப்பு விடுப்பேன்’’ என்றார்.
22 கோடி மக்கள் காப்பாற்றம்
மேலும், 'இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது மூலம் பாகிஸ்தானும், அதன் 22 கோடி மக்களும் காப்பற்றப்பட்டு விட்டனர்' என புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.
யார் இந்த ஷெபாஷ் ஷெரீப்
ஷெபாஷ் ஷெரீப் 3 முறை பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வராக இருந்தவர். 3 முறை பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பின் தம்பியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments