Header Ads

Header ADS

ரூ.1.38 லட்சம் ஊதியத்தில் என்ஜினியர்களுக்கு அரசு பணி; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் 626 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

அதன்படி டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து அரசு பணியை வெல்லலாம். இதுதொடர்பான முழுவிபரங்கள் வருமாறு: 

காலிப்பணியிடங்கள்

Automobile Engineer - 4

Junior Electrical Inspector - 8

Assistant Engineer (Agricultural Engineering) - 66

Assistant Engineer (Highways Department) - 33

Assistant Director of Industrial Safety and Health - 18

Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD) - 1

Assistant Engineer (Civil) (PWD) - 308

General Foreman - 7

Technical Assistant - 11

Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department) - 93

Assistant Engineer (Tamil Nadu Urban Habitat Development Board) - 64

Assistant Engineer (Chennai Metropolitan Development Authority) - 13 என மொத்தம் 626 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் BE முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பம் செய்யும் பொதுப்பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பிரிவினருக்கு வயது எல்லை கிடையாது.

சம்பளம் :

மாதம் குறைந்தபட்சம் ரூ.37 ஆயிரத்து 700ம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 கிடைக்கும்.

தேர்வு கட்டணம்:

பதிவு கட்டணமாக(Registration Fee) ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணமாக(Exam Fee) ரூ.200 உள்ளது. இந்த கட்டணத்தில் இருந்து எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிடபிள்யூடி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்ப முறை :

தகுதியுடன், விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு  விண்ணப்பம் செய்யலாம். விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்யும்போது உரிய தகவல்களையும், ஆவணங்களையும் இணைப்பது அவசியமாகும். விண்ணப்பம் செய்ய 03.05.2022 கடைசிநாளாகும்.

தேர்வு முறை :

விண்ணப்பத்தாரர்களுக்கு ஓஎம்ஆர்(OMR)மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். பேப்பர் ஒன்று, பேப்பர் 2 என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு பணி கிடைக்கும். எழுத்துத்தேர்வு 26.06.2022 அன்று நடைபெற உள்ளது.

தேர்வு தொடர்பான அறிவிப்பை அறிய Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here


No comments

Powered by Blogger.