ரணகளத்திலும் ஓர் கிளுகிளுப்பு! கர்ப்பமான ரகசிய காதலி! 69 வயதில் தந்தையாகும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின்
மாஸ்கோ, மே 16: உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது 69வது வயதில் தந்தையாக போவதாகவும், அவரது ரகசிய காதலியான முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கணை அலினா கபேவா கர்ப்பமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் நடவடிக்கை பிப்ரவரி மாதம் 24ம் தேதி துவங்கியது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
இதனால் உக்ரைன் நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது குண்டுவீச்சு
மேலும் ரஷ்ய படையினரின் வான்வெளி, தரைவழி ததாக்குதலால் ஏராளமான மக்கள் பலியாகி உள்ளனர். குண்டுவீச்சில் கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன. குறிப்பாக
மருத்துவமனைகள், பள்ளி கட்டடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன்
தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே ரஷ்யாவுக்கு மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவும் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
போருக்கு மத்தியில் சர்ச்சை
இதற்கிடையே பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. மேலும் திட்டமிட்டபடி உக்ரைனை ரஷ்யா கைப்பற்றாததால் அதன் அதிபர் விலாடிமிர் புதின் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விலாடிமிர் புதின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா அணுஆயுத போரை முன்னெடுக்க உள்ளது என்பது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இதுதொடர்பாக
ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ரகசிய காதலி கர்ப்பம்
இதற்கிடையே தான் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் ரகசிய காதலி அலினா கபேவா (வயது 38), என்பவர் ஸ்வீட்சர்லாந்தில் தனது குழந்தைகளுடன் ஆடம்பர பங்களாவில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தற்போது வரை விலாடிமிர் புதின், அலினா கபேவா இருவரும் தங்களுக்கு இடையே எந்த வகை உறவு உள்ளது என்பது குறித்து வெளிப்படையாக கூறியது இல்லை.
இந்நிலையில் தான் அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக பிரபல நாளிதழ்களில்
செய்திகள் வெளியாகி உள்ளது. இதுபற்றி
ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த
விலாடிமிர் புதின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த ரகசிய காதலி?
விலாடிமிர் புதினின் காதலியாக கூறப்படும் அலினா கபேவா. இவர் 2004 ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் மொத்தம் 2 பதக்கம் வென்ற இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 14 பதக்கங்கள் வென்றுள்ளார். மேலும் 2007 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார்.
இதுதவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது மனைவி லியுத்மிலாவை
2014ல் விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்துக்கும் அலினா கபேவா தான்
காரணம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments