ரூ.89 ஆயிரம் மாத ஊதியத்தில் வங்கி வேலை.. அழைக்கும் Bank Of Baroda.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: Bank Of Baroda வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.89 ஆயிரம் வரை கிடைக்கும்.
Bank Of Baroda வங்கியில் Relationship Manager, Credit Analyst பணிக்கான காலியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை அறிந்து தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
Bank of Baroda (BOB) வங்கியில் Relationship Manager, Credit Analyst பிரிவில் மொத்தம் 325 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் Relationship Manager பிரிவில் SMG / S IVல் 75, MMG / S IIIல் 100 பணியிடம் உள்ளது. Credit Analyst பிரிவில் MMG / S IIIல் 100, MMG / S IIல் 50 பணியிடங்களும் உள்ளன.
Relationship Manager, Credit Analyst பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு Finance பாடப்பிரிவில் Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு CA / CMA / CS / CFA முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பணிப்பிரிவில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Relationship Manager பணியில் SMG / S IV பிரிவிற்கு 35 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும். MMG / S III பிரிவிற்கு 28 வயது முதல் 35 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம். Credit Analyst பணியில் MMG / S III பிரிவிற்கு 28 வயது முதல் 35 வயதுக்குள்ளும், MMG / S II பிரிவிற்கு 25 வயது முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகள்படி வயது தளர்வு உண்டு.
MMGS II பிரிவிற்கு குறைந்தது ரூ.48,170 முதல் அதிகபட்சம் ரூ.69,180 வரையும், MMGS III பிரிவிற்கு குறைந்தது ரூ.6,840 முதல் அதிகபட்சம் ரூ.78,230 வரையும் சம்பளமாக கிடைக்கும். SMG/S-IV பிரிவிற்கு குறைந்தது ரூ.76,010 முதல் அதிகபட்சம் ரூ.89,890 வரையும் ஊதியம் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் Shortlist செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு அல்லது Group Discussion மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.bankofbaroda.in/career/current-opportunities/ இணையதளம் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 12.07.2022ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். GEN / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC / ST / PWD / Women விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும்.
கூடுதல் விபரங்கள் அறிய விரும்புவோர் Click here செய்து அறிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்
No comments