மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.80 சம்பளத்தில் மத்திய அரசு பணி! டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் 1050 காலியிடங்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் வரையிலான சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் நிலக்கரித்துறையின் கட்டுப்பாட்டில் Coal India Limitedகீழ் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு Maharatna நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு காலிபணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இந்த நிறுவனத்தில் மொத்தம் 1,050 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் மைனிங் பிரிவி்ல் 699 பேர், சிவில் பிரிவில் 160 பேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் பிரிவில் 124 பேர், சிஸ்டம் மற்றும் இடிபி பிரிவில் 67 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் மைனிங், சிவில், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேசன் பிரிவில் பணியாற்ற விரும்புவோர் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்) படிப்பை முடித்திருக்க வேண்டும். சிஸ்டம் மற்றும் இடிபி பணிக்கு கம்யூட்டர் பாடப்பிரிவில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்) அல்லது எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 31.05.2022ன் அடிப்படையில் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000ம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தாரர்கள் GATE மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி செய்யப்படும். அதன்பிறகு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.coalindia.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் .விண்ணப்ப கட்டணமாக ரூ.1180 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூ, இஎஸ்எம் பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய ஜூலை 22ம் தேதி இறுதி நாளாகும்.
முறையான அறிவிப்பை காண Click here செய்து பாருங்கள். கூடுதல் விபரங்களை www.coalindia.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
No comments