நீங்கள் எப்படிபட்டவர்...? உங்களின் குணங்களை சொல்லும் நிறங்கள்.. இத படியுங்க முதல்ல..
சென்னை: ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு உரிய ஆளுமை பண்புகள் என்ன? என்பது முழுவதுமாக தெரியாது. பலருக்கும் ஓரளவு தெரிந்திருந்தாலும் இன்னும் சிலர் குழப்பமான நிலையில் தான் உள்ளனர்.
இந்த குழப்பத்தை போக்கி கொள்ள தான் இந்த செய்தி. அதாவது ஒருவருக்கு பிடித்த நிறமே அவர்களின் ஆளுமை பண்பு அல்லது குணங்களை கூறிவிடுமாம்.
இதை நாங்க சொல்லலங்க.. பல ஆண்டுகளாக ஏராளமானவர்களிடம் ஆய்வு நடத்தி ஒருவர் விரும்பும் நிறங்களின் அடிப்படையில் அவரது ஆளுமை பண்பு/குணங்கள் பற்றிய விபரங்களை உளவியல் நிபுணர்கள் தொகுத்துள்ளனர்.
அதன்படி உங்களது குணம் அல்லது உங்களின் மனதுக்கு பிடித்த நபரின் குணங்களை அறிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களுக்கு பிடித்த நிறம் அல்லது உங்களின் மனதுக்கு பிடித்த நபர் விரும்பும் நிறத்தை நினைத்துக்கொண்டு இந்த செய்தியை படித்து குணங்களை அறிந்து கொள்ளுங்கள். முதலில் பிங்க் (இளஞ்சிவப்பு), பர்பிள் (ஊதா), ஆரஞ்சு, கோல்டு, சிவப்பு, பச்சை, வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகியவற்றில் உங்களுக்கு பிடித்த நிறம் என்ன என்பதை தேர்வு செய்யுங்கள். அதன்பின் தொடர்ந்து படித்து குணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
பிங்க்(இளஞ்சிவப்பு) பிடிக்குமா?
பிங்க் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தின் ரசிகர்/ரசிகையாக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு தான். நீங்கள் நட்பான நபராக இருப்பீர்கள். சக ஊழியர்களை கவனித்து கொள்வதிலும் அதீத கவனத்துடன் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது, அவர்களுக்கு நல்வழி காட்ட நல்ல யோசனை வழங்குவதை நீங்கள் செய்யலாம். நீங்கள் நிபந்தனையற்ற அன்பை தேடும் நபராக இருக்கலாம். உண்மையில் நீங்கள் அன்பான, விளையாட்டு தனமான, வேடிக்கையான, எளிமையான, புத்திசாலித்தனமானவராக இருக்கலாம்.
பர்பிள் (ஊதா) விரும்புவராக நீங்கள்?
பர்பிள் எனும் ஊதா நிறத்தை விரும்பும் நபராக நீங்கள் இருந்தால் கலை-படைப்பில் சிறந்து விளங்கலாம். தொலைநோக்கு பார்வை மற்றும் எதையும் சிந்தித்து செயல்படும் நபராக நீங்கள் இருக்கலாம். உங்கள் தனித்துவத்தால் நீங்கள் செய்யும் தொழிலில் சிறந்து விளங்கலாம். வழக்கமாக ஒருவர் செய்யும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வேலையை நீங்கள் விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால் ஒருவரின் உத்தவுக்கு ஏற்ப செயல்படவோ, இன்னொருவரின் கட்டுப்பாட்டில் இருக்கவோ விரும்பமாட்டீர்கள். நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும், அதேநேரத்தில் ரகசியங்கள் கொண்டவராகவும் நீங்கள் இருக்கலாம்.
ஆரஞ்சு நிறம் பிடிக்குமா?
ஆரஞ்சு நிறத்தின் ரசிகர் அல்லது ரசிகையாக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு தான். நீங்கள் சவால்களை நேருக்கு நேர் சந்திக்க தயங்குவது இல்லை. பிரச்சனைகளுக்கு யோசித்து ஆக்கப்பூர்வ செயல்பாடு மூலம் தீர்வு காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சுதந்திரம் மற்றும் வளைந்து கொடுத்து செல்வதை விரும்புவீர்கள். அதன்படி நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். சிலவேளைகளில் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதில் சிரமப்படுவீர்கள். உங்களுக்கு பிடித்தது போன்ற ஒருவரையே நீங்கள் நண்பராக தேடுவீர்கள்.
கோல்டு கலர் பிடிக்குமா?
கோல்டு கலர் பிடித்த நபர் என்றால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் அழகு, செல்வங்களுடன் வெற்றிகள் பெற்று வாழ்க்கையை வாழலாம். இல்லாவிட்டால் அத்தகைய வாழ்க்கையை வாழ விரும்பும் நபராக இருக்கலாம். இதற்காக முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் பிறர் மீது அக்கறையுடன், அன்புடன் தாராள மனப்பான்மையுடன் இருப்பீர்கள். உங்களின் அறிவாற்றல் மற்றும் பொருள் செல்வத்தை பிறருக்கு பகிர்ந்து கொண்டும் மகிழ்வீர்கள்.சிவப்பு நிறத்தை விரும்புபவரா நீங்கள்?
உங்களுக்கு பிடித்த நிறம் சிவப்பு என்றால் நீங்கள் மிகவும் உறுதியானவர்கள். உறவுகளை பொறுத்தமட்டில் நீங்கள் உண்மையாக இருப்பீர்கள். அதனையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதை எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் அதீத பற்றுடன் ஒருவரை நேசிப்பீர்கள். தைரியமாகவும், உறுதியாகவம், விடாப்பிடியாகவும் உங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் குணம் கொண்டவர். வேலையை பொறுத்தமட்டில் நீங்கள் நீங்கள் வேலையை நன்றாக செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் வெறும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் வேலையை திறம்பட செய்வீர்கள். நீங்கள் விரைவாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். எதையும் நீங்களே முடிவெடுத்து செயல்பட விரும்புவீர்கள். நீங்கள் விரும்பிய ஒன்றை அடைவதற்காக விடாப்பிடியுடன் செயல்படுவீர்கள். மேலும் யாரையும் எளிதாக சமாளிக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள். எப்போதும் அதிகாரத்தை விரும்புவீர்கள். உங்கள் அதிகாரம், சுதந்திரத்தை இன்னொருவரிடம் விட்டு கொடுக்க விரும்பமாட்டீர்கள். . நீங்கள் எப்போதும் தலைமை பொறுப்பில் இருக்க விரும்பும் நபராக இருக்கலாம்.ப்ளூ (நீலம்) நிறத்தை விரும்பும் நபரா நீங்கள்?
ப்ளூ எனும் நீல நிறம் உங்களுக்கு பிடித்தால் உங்களின் குணம் இப்படித்தான் இருக்கும். உறவுகளை பொறுத்தமட்டில் நீங்கள் உண்மையான, ரொமண்டிக்காக இருக்கக்கூடியவர்கள். இதற்கு ஏற்ப தான் நண்பர்/தோழி/மனைவி/கணவரை தேடுவீர்கள். இசையை ரசிக்கும் குணம் கொண்டவராகவும், இரவு நேர ஊர்சுற்றல், கேன்டில் லைட் டின்னர் உள்ளிட்ட கலாச்சாரங்களை விரும்பும் நபராக இருக்கலாம். நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இதனால் உணர்ச்சி ரீதியாக முடிவுகள் எடுப்பீர்கள். உங்களை ஒருவ் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவதை நீங்கள் விரும்புவீர்கள். பணியை பொறுத்தமட்டில் நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும், கவனமாகவும் செயல்படுவீர்கள். மற்றவர்களையும் ஊக்குவிப்பீர்கள். கருத்து பரிமாற்றங்கள் மூலம் முடிவு எடுப்பீர்கள். நீங்கள் சிறந்த தலைவராக இருக்க விரும்புவீர்கள். ஊழியர்கள்/தொழிலாளர்களிடம் இருந்து வேலையை பெறுவதற்காக நேர்மறை எண்ணங்களை விதைப்பீர்கள். பிரச்சனைகளை தீர்ப்பதில் வல்லவரான நீங்கள் மற்றவர்களின் திறனை மேம்படுத்த உதவுவீர்கள். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் நேர்மையையும் இரக்க கண்ணோட்டத்தையும் பாராட்டலாம்.
பச்சை நிறத்தை விரும்புபவரா நீங்கள்?
பச்சை நிறத்தை விரும்பும் நபரா நீங்கள்.. உங்களை பொறுத்தமட்டில் உறவுகளில் நீங்கள் 'Head over Heart’ அணுகுமுறை கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவீர்கள். உணர்ச்சிப்பூர்வமான நபர் என்பதால் உங்களின் விருப்பங்களை யாரும் தடுத்தால் கவலை கொள்வீர்கள். யாராக இருந்தாலும் வெறும் நட்பை தாண்டி உணர்ச்சி ரீதியாக பழக முயற்சி செய்வீர்கள். விரும்பும் நபரை யாரிடமும் ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டீர்கள். வேலையை பொறுத்தமட்டில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். இதன்மூலம் வெற்றியும் பெறுவீர்கள். புதிய விஷயங்கள், பிறரின் கருத்துகளை கேட்கும் நபராக இருப்பதோடு, பணியிடங்களில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பீர்கள். நல்ல செயல்களுக்காக பாராட்டுகளை பெறுவீர்கள். வேலையில் தடைகள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். இதற்காக தைரியமான மடிவுகளை நீங்கள் எடுக்கமாட்டீர்கள். மாறாக புதிய யோசனைகளை கேட்டு ஆய்வு செய்து செயல்படுத்துவீர்கள். குறிப்பாக மற்றவர்களின் மனநிலையை அறிவதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.
மஞ்சள் மனம் விரும்புகிறதா?
உங்களுக்குப் பிடித்த நிறம் மஞ்சள் என்றால் நீங்கள் வேடிக்கையான, மகிழ்ச்சியான நபராக இருக்கலாம். நீங்கள் மக்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் அதிக நேரம் தனிமையில் இருக்க விரும்புவது இல்லை. மகிழ்ச்சி மனநிலை உங்களை உற்சாகப்படுத்தும். மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களை உற்சாகப்படுத்துகின்றன. உறவுகளை பொறுத்தமட்டில் நீங்கள் நிகழ்காலத்தில் வாழ விரும்புகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வீர்கள். உங்கள் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பீர்கள். புதிய நபர்களை சந்திப்பது, சாகசங்கள் செய்வதை விருப்பமாக கொண்டு இருப்பீர்கள். வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் உங்களை கவலையில்லாத மனிதர், அக்கறையில்லாத நபராக நினைக்கலாம். வேலையை பொறுத்தமட்டில் படைப்பாற்றல் என்பது அதிகமாக இருக்கும். உங்கள் வேலையில் தன்னிச்சையாக செயல்பட விரும்புவீர்கள்.. நீங்கள் புதிய யோசனைகளை செயல்படுத்த விரும்புவீர்கள். புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில் சிறந்து விளங்குவீர். பொருளாதாரம் சார்ந்து நல்ல முடிவுகளை நீங்கள் எடுக்கும் நபராக இருப்பீர்கள்.
கருப்பு நிறம் பிடிக்குமா?
உங்களுக்கு பிடித்த நிறம் கருப்பு என்றால் உங்கள் வேலையிலும், உறவுகளிலும் அச்சுறுத்தும் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தும் நபராக இருக்கலாம். நீங்கள் ஒரு வழக்கமான செயல் அல்லது பழமைவாதத்தை பின்பற்றும் நபராக இருப்பீர்கள். புதிய முயற்சியில் கொஞ்சம் தயங்கலாம். அதோடு மனதளவில் கொஞ்சம் நெகட்டிவ் எண்ணம் இருக்கலாம். ஆனாலும் கூட சில வேளைகளில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். அப்போது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பீர்கள். இதனால் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்வீர்கள். எதிலும் நேர்மறை எண்ணம் கொண்டவர். எல்லாவற்றையும் நீங்களே செய்ய முயற்சிப்பீர்கள். மற்றவர்களிடம் உதவி கேட்ப நினைக்கமாட்டீர்கள். மேலும் அதிகாரம் படைத்தவர்களையும் எதிர்க்கவும் தயங்கமாட்டீர்கள். மேலும் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிறரை அனுமதிக்கமாட்டீர்கள். நன்றாக பேசும் நபராக உங்களை யார் நினைத்தாலும் கூட உங்களிடம் அதிக ரகசியம் இருக்கலாம். அதாவது உங்களை பற்றிய பல விஷயங்களை நீங்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காக்கலாம். இதனால் உங்களைச் சுற்றி ஒரு மர்மஒளி இருந்து கொண்டே இருக்கும். உங்களை பொறுத்தமட்டில் உங்களுக்கு நீங்கள் மட்டுமே நம்பகமான நபராக இருப்பீர்கள்.
வெள்ளை நிறத்தை விரும்பும் நபரா நீங்கள்?
நீங்கள் வெள்ளை நிறத்தை விரும்பும் நபராக இருந்தால் இது உங்களுக்கு தான். நீங்கள் பொறுமைசாலியாக இருக்கலாம். நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கும் நபராகவும், அப்பாவி குணம் கொண்டவராகவும் இருக்கலம். அமைதியாக இருந்தாலும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புவீர்கள். வேலையை பொறுத்தட்டில் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்க ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். சுதந்திரமான வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள். அமைதி வடிவிலும் கூட பிடிவாத குணம் இருக்கலாம். உங்களின் வேலையில் தொலைநோக்கு பார்வை இருக்கும். உறவு முறைகளை பொறுத்தமட்டில் நீங்கள் தாராளமான நபராகவும், அனைவரிடமும் கனிவாக பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பீர்கள். பிறரின் கருத்துகளுக்கு செவிசாய்ப்பீர்கள். உங்களின் தனித்துவமான செயல்பாடுகளால் நீங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நபராக இருப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments